என் மலர்
உள்ளூர் செய்திகள்

ஓ.பன்னீர்செல்வம்
மழையால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு உடனே இழப்பீடு வழங்க வேண்டும்- தமிழக அரசுக்கு ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கை
நெல் மூட்டைகள் மழையில் நனையாமல் இருக்கும் வகையில் அவற்றை உடனடியாக சேமிப்புக் கிடங்குகளுக்கு அனுப்ப விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஓ. பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.
சென்னை:
அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய டெல்டா மாவட்டங்களில் சம்பா மற்றும் தாளடி நெல் சாகுபடி பத்து லட்சம் ஏக்கரில் நடவு செய்யப்பட்டு இருந்ததாகவும், தற்போது அறுவடை தீவிரமாக இருக்கின்ற நேரத்தில், எதிர்பாராத மழை காரணமாக 1.5 லட்சம் ஏக்கரில் பயிரிடப்பட்டு அறுவடைக்கு தயாராக இருந்த நெற்கதிர்கள் சாய்ந்து விட்டதாகவும், ஊடுபயிராக சாகுபடி செய்த பிற பயிர்களும் நீரில் மூழ்கி அழுகிவிட்டதாகவும் விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
இது ஒருபுறம் என்றால், மறுபுறம் அறுவடை செய்த நெல் மூட்டைகளை கொள்முதல் செய்வதில் காலதாமதம் ஏற்படுவதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
அறுவடை செய்த நெல்லை நேரடி கொள்முதல் நிலையங்களில் கொட்டி வைத்துள்ளதாகவும், திடீர் மழை காரணமாக அரசு கொள்முதல் நிலையங்களில் கொட்டி வைக்கப்பட்டிருந்த ஆயிரக்கணக்கான நெல் மூட்டைகள் மழையில் நனைந்துவிட்டதாகவும், இதற்குக் காரணம் தினமும் குறைந்தஅளவிலேயே நெல் மூட்டைகள் கொள்முதல் செய்யப்படுவதும், கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகளை சேமிப்புக் கிடங்குகளுக்கு எடுத்துச் செல்வதில் தாமதம் ஏற்படுவதும்தான் என்றும், இதன் விளைவாக ஈரப்பதம் அதிகரித்துவிட்டதாகவும், இன்றைய நிலவரப்படி 80,000-க்கும் அதிகமான நெல் மூட்டைகள் கொள்முதல் செய்யப்படாமல் கொள்முதல் நிலையங்களில் தேங்கியுள்ளதாகவும் விவசாயிகள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.
பிப்ரவரி மாதம் வரை சேதமடைந்த பயிர்களுக்கான இழப்பீடு வழங்கப்பட வேண்டும் என்பதும், நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மூலம் அதிக அளவு நெல் மூட்டைகள் கொள்முதல் செய்யப்பட வேண்டும் என்பதும் விவசாயிகளின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.
எனவே, முதல்-அமைச்சர் இதில் உடனடியாக தலையிட்டு, மழையினால் சேதமடைந்த அனைத்துப் பயிர்களுக்கும் உரிய இழப்பீடு வழங்கவும், நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மூலம் ஒரு நாளைக்கு குறைந்தபட்சம் 1,500 நெல் மூட்டைகளை கொள்முதல் செய்யவும், நெல் மூட்டைகள் மழையில் நனையாமல் இருக்கும் வகையில் அவற்றை உடனடியாக சேமிப்புக் கிடங்குகளுக்கு அனுப்பவும் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Next Story