search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி
    X
    தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி

    தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி பொங்கல் வாழ்த்து

    பொங்கல் பண்டிகையை கொண்டாடும் போது கொரோனா தடுப்பு நெறிமுறைகளை கடைப்பிடித்து பாதுக்காப்பாக இருக்குமாறு கவர்னர் ஆர்.என்.ரவி கேட்டுக்கொண்டுள்ளார்.
    சென்னை:

    தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி பொங்கல் வாழ்த்து செய்தி வெளியிட்டுள்ளார். அதில் கூறியிருப்பதாவது:-

    பொங்கல் மற்றும் மகர சங்கராந்தியின் மகிழ்ச்சியான தருணத்தில் தமிழ்நாட்டின் சகோதர, சகோதரிகளுக்கு எனது மனமார்ந்த நல் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.

    பொங்கல் பண்டிகை அறுவடையின் கொண்டாட்டமாகும். நமக்கு வாழ்க்கை, ஆற்றல் மற்றும் உயிர்சக்தியை வழங்கும் சூரிய கடவுளுக்கு நன்றி செலுத்துகிறோம். தை மாதத்தின் தொடக்கத்தில் கடவுளின் ஆசீர்வாதத்திற்காக பிரார்த்தனை செய்கிறோம்.

    கன்னியாகுமரி முதல் காஷ்மீர் மற்றும் கட்ச் முதல் கம்ரூப் வரை நாட்டின் அனைத்து பகுதிகளிலும், பாரதத்தின் பகிரப்பட்ட கலாச்சாரம் வேரூன்றியிருந்தாலும் நமது மக்களின் வளமான பன்முகத்தன்மைக்கு அடிப்படையான உள்ளார்ந்த ஒருமைபாட்டை பிரதிபலிக்கும் வகையில் இந்த பண்டிகை கொண்டாடப்படுகிறது.

    இப்பண்டிகை, அனைவரது வாழ்விலும் ஆரோக்கியம், செல்வம், மகிழ்ச்சியுடன் நிறைந்த செழிப்பு நிரப்பட்டும். இந்த அழகான பொங்கல் பண்டிகையை கொண்டாடும் போது கொரோனா தடுப்பு நெறிமுறைகளை கடைப்பிடித்து பாதுக்காப்பாக இருக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    Next Story
    ×