என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
தமிழகத்தில் 10, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு திட்டமிட்டபடி ஜன. 19-ம் தேதி திருப்புதல் தேர்வு
Byமாலை மலர்11 Jan 2022 4:16 PM GMT (Updated: 11 Jan 2022 4:16 PM GMT)
கொரோனா எண்ணிக்கை அதிகரித்து பொதுத்தேர்வு நடத்த முடியாத சூழல் ஏற்பட்டால், திருப்புதல் தேர்வு மதிப்பெண்ணை மதிப்பீடாக எடுக்க வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகிறது.
சென்னை:
தமிழகத்தில் ஜனவரி 19-ம் தேதி திட்டமிட்டபடி 10,12-ம் வகுப்பு மாணவர்களுக்கான திருப்புதல் தேர்வு நடைபெறும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.
தமிழகத்தில் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான திருப்புதல் தேர்வுகள் ஜனவரி 20-ம் தேதி முதல் 28-ம் தேதி வரையும், 10-ம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வுகள் வரும் 19-ம் தேதி முதல் 27-ம் தேதி வரையும் நடைபெறும் என கடந்த டிசம்பர் மாதம் தேர்வுத்துறை அறிவித்தது.
இந்நிலையில் தற்போது தமிழகத்தில் கொரோனா அதிகரித்து வரும் நிலையில் இரவு ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. பள்ளிகளில் 1 முதல் 9-ம் வகுப்பு மாணவர்களுக்கு மறு அறிவிப்பு வரும் வரை விடுமுறை அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் திருப்புதல் தேர்வு ரத்து செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் திட்டமிட்டபடி 10 மற்றும் 12-ம் வகுப்பு திருப்புதல் தேர்வு நடைபெறும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மே மாதத்தில் தொற்று எண்ணிக்கை அதிகரித்து பொதுத்தேர்வு நடத்த முடியாத சூழல் ஏற்பட்டால், திருப்புதல் தேர்வு மதிப்பெண்களை மதிப்பீடாக எடுக்க வாய்ப்புகள் உள்ளதாகவும் கூறப்படுகிறது.
Next Story
×