என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்

X
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
ஊரடங்கு நீட்டிப்பா? - கூடுதல் கட்டுப்பாடு குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை
By
மாலை மலர்9 Jan 2022 10:44 PM GMT (Updated: 9 Jan 2022 10:44 PM GMT)

கடந்த ஒரு வாரமாக தமிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அசுர வேகத்தில் அதிகரித்து வருகிறது. அதேபோல், ஒமைக்ரான் பாதிப்பு எண்ணிக்கையும் உயர்ந்து வருகிறது.
சென்னை:
தமிழகத்தில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் விதமாக தமிழக அரசு சார்பில் அறிவிக்கப்பட்டிருந்த ஊரடங்கு கட்டுப்பாடுகள் இன்றுடன் முடிவடைகின்றன.
இதற்கிடையே, கடந்த 6-ம் தேதி முதல் தினமும் இரவு 10 மணியில் இருந்து காலை 5 மணி வரை தமிழகத்தில் இரவுநேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. மேலும், ஞாயிற்றுக்கிழமைகளில் தமிழகம் முழுவதும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் எனவும் தமிழக அரசு அறிவித்தது.
இந்நிலையில், ஊரடங்கு நீட்டிப்பு மற்றும் கூடுதல் கட்டுப்பாடுகள் தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று மருத்துவத்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்த உள்ளார்.
தலைமைச் செயலகத்தில் இன்று காலை 11 மணிக்கு நடைபெற உள்ள இந்தக் கூட்டத்தில் மருத்துவத்துறை செயலாளர், பொது சுகாதாரத்துறை இயக்குனர், மருத்துவக்கல்வி இயக்குனர் உள்ளிட்டோர் பங்கேற்க இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படியுங்கள்...பூஸ்டர் தடுப்பூசி - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார்
Next Story
×