search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அதிமுக வெளிநடப்பு
    X
    அதிமுக வெளிநடப்பு

    கூட்டுறவு சங்க நிர்வாகிகள் பதவிக்காலம் 3 ஆண்டாக குறைப்புக்கு எதிர்ப்பு- அ.தி.மு.க. வெளிநடப்பு

    கூட்டுறவு சங்கங்களுக்கு கடந்த 2018-ம் ஆண்டில் தான் தேர்தல் நடந்தது. இப்போது பதவிக்காலம் 3 ஆண்டுகளாக குறைக்கப்பட்டு இருப்பதால் அவர்களுடைய பதவி தானாகவே முடிவடைந்து விடுகிறது.

    சென்னை:

    சட்டசபையில் இன்று கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி, கூட்டுறவு சங்கங்களின் பதவிக்காலத்தை குறைக்கும் மசோதாவை தாக்கல் செய்தார். அதில் கூறியிருப்பதாவது:-

    பொதுமக்களிடம் இருந்தும், கூட்டுறவு சங்கங்களின் உறுப்பினர்களிடம் இருந்தும் கூட்டுறவு சங்கங்களில் நிதி முறைகேடு மற்றும் மோசடிகள் நடப்பதாக பல புகார்கள் வந்துள்ளன.

    கூட்டுறவு சங்கங்களின் செயல்பாடுகளை ஆய்வு செய்ததில் அதிகளவிலான நிதி முறைகேடுகளும், போலி நகைகள் மீதான கடன்கள் மற்றும் கோடிக்கணக்கில் போலி கடன்கள் வழங்கப்பட்டு இருப்பதும் வெளிவந்துள்ளன.

    எனவே கூட்டுறவு சங்கங்களை பாதுகாக்கும் நோக்கில் அதன் நிர்வாகங்களை நெறிப்படுத்தவும், முறையாக நிர்வகிக்கவும், கூட்டுறவு சங்க செயல்பாடு திறனை அதிகரிக்கவும், கூட்டுறவு சங்கங்களின் இயக்குனர்களின் பதவிக் காலத்தை 5 ஆண்டுகளில் இருந்து 3 ஆண்டுகளாக குறைக்கும் வகையில் ஒரு சட்டத்தை மேற்கொள்ள அரசு முடிவு செய்துள்ளது.

    இதற்காக 1983-ம் ஆண்டில் கூறப்பட்ட தமிழ்நாடு கூட்டுறவு சங்கங்கள் சட்டத்தில் இருக்கும் சில வகை முறைகளை மீட்டெடுக்கவும் அரசு முடிவு செய்துள்ளது. அதை செயல்படுத்தும் வகையில் இந்த சட்ட மசோதா தாக்கல் செய்யப்படுகிறது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    இந்த சட்ட மசோதாவை தாக்கல் செய்தபோது எதிர்க் கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி எழுந்து கூட்டுறவு சங்கங்களின் பதவிக்காலத்தை 5 ஆண்டில் இருந்து 3 ஆண்டாக குறைக்கும் சட்ட மசோதாவை ஆரம்ப நிலையிலேயே எதிர்க்கிறோம்.

    அதை எதிர்த்து வெளி நடப்பு செய்கிறோம் என்று கூறிவிட்டு அவையில் இருந்து வெளியேறினார். அவருடன் அ.தி.மு.க. எம்.எல். ஏ.க்களும் வெளிநடப்பு செய்தனர்.

    கூட்டுறவு சங்கங்களுக்கு கடந்த 2018-ம் ஆண்டில் தான் தேர்தல் நடந்தது. இப்போது பதவிக்காலம் 3 ஆண்டுகளாக குறைக்கப்பட்டு இருப்பதால் அவர்களுடைய பதவி தானாகவே முடிவடைந்து விடுகிறது.

    இதையும் படியுங்கள்... பொங்கல் பரிசு பொருட்களில் கருப்பட்டி, பனங்கிழங்கு இல்லாதது ஏமாற்றம்- என்.ஆர்.தனபாலன்

    Next Story
    ×