என் மலர்
உள்ளூர் செய்திகள்

என்ஆர் தனபாலன்
பொங்கல் பரிசு பொருட்களில் கருப்பட்டி, பனங்கிழங்கு இல்லாதது ஏமாற்றம்- என்.ஆர்.தனபாலன்
பொங்கல் பரிசு பொருட்களில் கருப்பட்டி, பனங்கிழக்கு, மஞ்சள் செடி, கிழங்கு வகைகளையும் அரசு வழங்காதது விவசாயிகளுக்கு ஏமாற்றமாக அமைந்துள்ளது என்று என்.ஆர்.தனபாலன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி உள்ளார்.
சென்னை:
பெருந்தலைவர் மக்கள் கட்சித் தலைவர் என்.ஆர்.தனபாலன் விடுத்துள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை அனைவரும் மகிழ்ச்சியுடனும் சிறப்பாகவும் கொண்டாடி மகிழ்ந்திட தமிழக அரசின் சார்பில் பொங்கல் பரிசாக 20 பொருட்களை இலவசமாக வழங்கிட முன் வந்திருப்பதை வரவேற்கிறோம். அதில் உப்பு, கோதுமை மாவு, மிளகாய் பொடி போன்ற பொருட்களுக்கு பதிலாக பொங்கல் பண்டிகைக்கு அத்தியாவசியமாக பயன்படுத்தக்கூடிய கருப்பட்டி, பனங்கிழங்கு, மஞ்சள் செடி போன்ற பொருட்களை வழங்கியிருந்தால் இன்னும் கூடுதல் சிறப்பு வாய்ந்ததாக இருந்திருக்கும்.
கருப்பட்டி, பனங்கிழக்கு, மஞ்சள் செடி, கிழங்கு வகைகளையும் அரசு வழங்காதது விவசாயிகளுக்கு ஏமாற்றமாக அமைந்துள்ளது. இனி வரும் காலங்களிலாவது தமிழக அரசு சாதுரியமான முறையில் உழவர்கள் பயன் அடையும் வகையில் விவசாய விளைபொருட்களை பரிசு பொருட்களாக தேர்வு செய்து வழங்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Next Story