என் மலர்

    செய்திகள்

    நாம் தமிழர் கட்சி
    X
    நாம் தமிழர் கட்சி

    தொட்டியத்தில் நாம் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    தொட்டியத்தில் மத்திய, மாநில அரசுகளை கண்டித்து நாம் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
    தொட்டியம்:

    தொட்டியம் ஒன்றிய நாம் தமிழர் கட்சி சார்பில் மத்திய, மாநில அரசுகளை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் தொட்டியம் வாணபட்டறை மைதானத்தில் நடைபெற்றது. 

    ஆர்ப்பாட்டத்திற்கு திருச்சி வடக்கு மாவட்ட செயலாளர் அசோக்குமார் தலைமை வகித்தார். முசிறி தொகுதி செயலாளர் நாகராஜன் முன்னிலை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் மாநில இளைஞர் பாசறை செயலாளர் சரவணன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். 

    மத்திய அரசு கொண்டுவந்துள்ள புதிய வேளாண் திட்டத்தை கைவிடக் கோரியும், நீட் தேர்வை ரத்து செய்ய கோரியும், புதிய கல்விக் கொள்கையை மாநில அரசு அமல்படுத்தக் கூடாது எனக் கோரியும் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
    Next Story
    ×