search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தேமுதிக
    X
    தேமுதிக

    வில்லிவாக்கம் ஒன்றிய தேர்தல்: பாமக-தேமுதிகவை எதிர்த்து அதிமுக போட்டி

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    சென்னை வில்லிவாக்கம் ஒன்றிய தேர்தலில் பாமக-தேமுதிகவை எதிர்த்து அதிமுக களத்தில் இறங்கியுள்ளது.

    சென்னை:

    உள்ளாட்சி தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணியில் இடம் பெற்றுள்ள பா. ம.க., பா.ஜனதா, தே.மு. தி.க. ஆகிய கட்சிகளுக்கு ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒன்றிய வார்டுகள், மாவட்ட பஞ்சாயத்து வார்டுகள் ஒதுக்கப்பட்டன. மேல்மட்டத்தில் பேசி உடன்பாடு செய்யப்பட்டது.

    ஆனால் கீழ் மட்டத்தில் அந்த உடன்பாட்டை கட்சியினர் ஏற்றுக்கொள்ளவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் பல இடங்களில் கூட்டணி கட்சிகளே நேருக்கு நேர் மோதும் சூழல் ஏற்பட்டுள்ளது.

    சென்னை வில்லிவாக்கம் ஒன்றியத்தில் 3, 5, 8-வது வார்டுகள் பா.ம.க.வுக்கு ஒதுக்கப்பட்டது. ஆனால் இந்த வார்டுகளில் பா.ம. க.வை எதிர்த்து அ.தி.மு.க. வேட்பாளர்களும் களத்தில் இறங்கி இருக்கிறார்கள்.

    இதுபற்றி பா.ம.க. நிர்வாகிகள் கூறும்போது, திருவள்ளூர் மாவட்டத்தில் மொத்தம் 230 ஒன்றிய வார்டுகள் உள்ளன.

    இதில் பா.ம.க.-34, தே.மு.தி.க.-18, பா.ஜனதாவுக்கு -14 வார்டுகள் ஒதுக்கப்பட்டு இருந்தன. ஆனால் எல்லா வார்டுகளிலும் எல்லா கட்சிகளும் போட்டியில் இறங்கி இருக்கின்றன.

    கீழ் மட்டத்தில் கட்சியினரிடையை இருக்கும் கோஷ்டி மோதலை சமாளிக்க முடியாததால் தான் இந்த நிலை உருவாகி இருக்கிறது. இது நிச்சயம் எங்கள் கூட்டணிக்கு பலவீனமாகவே அமையும் என்றார்கள்.

    Next Story
    ×