என் மலர்
செய்திகள்

கைது
முன்விரோதத்தில் 2 பேருக்கு அரிவாள் வெட்டு: அண்ணன்-தம்பி கைது
முன்விரோதத்தில் 2 பேரை அரிவாளால் வெட்டிய அண்ணன் மற்றும் தம்பியை போலீசார் கைது செய்தனர்.
மயிலாடுதுறை:
மயிலாடுதுறை ஆனதாண்டவபுரம் ரோட்டை சேர்ந்த சுப்பிரமணியன் மகன் ராமன் (வயது 35). அதே பகுதியை சேர்ந்த கருணாமூர்த்தி என்பவர் கடந்த 23-ந் தேதி இறந்து விட்டார்.
அவரது இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்ட மயிலாடுதுறை சேந்தங்குடியை சேர்ந்த பன்னீர்செல்வத்தின் மகன்கள் முத்துக்குமார் (27), மனோஜ்குமார் (22) ஆகிய 2 பேரும் குடிபோதையில் சாலையில் கூச்சலிட்டு தகராறு செய்ததாக கூறப்படுகிறது. இதனை ராமன் மற்றும் அவரது நண்பர் குமரகுரு ஆகியோர் தட்டி கேட்டனர். இதையடுத்து அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது.
இதனால் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக நேற்று முன்தினம் முத்துக்குமார், மனோஜ்குமார் ஆகிய 2 பேரும் சேர்ந்து இறுதி ஊர்வலத்தின்போது எப்படி எங்களை தட்டிக்கேட்கலாம்? என கூறி ராமன் மற்றும் குமரகுருவை அரிவாள் மற்றும் கத்தியால் வெட்டிவிட்டு தப்பி சென்று விட்டனர். இதில் காயம் அடைந்த 2 பேரும் சிகிச்சைக்காக மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.
இது குறித்த புகாரின்பேரில் மயிலாடுதுறை போலீஸ் இன்ஸ்பெக்டர் சிங்காரவேலு வழக்குப்பதிவு செய்து முத்துக்குமார், மனோஜ்குமார் ஆகிய 2 பேரையும் கைது செய்து, விசாரணை மேற்கொண்டுள்ளார்.
Next Story






