என் மலர்
செய்திகள்

தஞ்சை திலகர் திடலில் நடந்த சமூக நிதி மாநாட்டில் தி.க. தலைவர் கி.வீரமணி பேசியபோது எடுத்த படம்.
திராவிடர் கழகத்தின் அடுத்த தலைவராக கலிபூங்குன்றன் இருப்பார்- கி.வீரமணி
தனக்கு பின்னால் திராவிடர் கழகத்தின் தலைவராக கலிபூங்குன்றன் இருப்பார் என தஞ்சை மாநாட்டில் கி.வீரமணி அறிவித்துள்ளார். #KVeeramani #KaliPoongundran
தஞ்சாவூர்:
தஞ்சையில் திராவிடர் கழக மாநாடு நடைபெற்று வருகிறது. இதில் கலந்து கொண்ட திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
எனக்கு பின்னால் திராவிடர் கழக தலைவராக கலிபூங்குன்றன் இருப்பார்.
வருகிற பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க தலைமையிலான கூட்டணி அமோக வெற்றிபெறும். மாநிலம் மற்றும் மத்தியில் ஆளும் கட்சிகள் தொழிலாளர்களுக்கு ரூ. 2 ஆயிரம், 6 ஆயிரம் கொடுக்கின்றனர். அவர்கள் எவ்வளவு பணம் கொடுத்தாலும் ஆட்சியை பிடிக்க முடியாது.

40க்கு 40 என அ.தி.மு.க. கூறிவருகிறது. ஆனால் ஒரு தொகுதியில் கூட அவர்களால் டெபாசிட் வாங்க முடியாது. ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க. கூட்டணிதான் 40 தொகுதிகளிலும் வெற்றி பெறும்.
திராவிடர் கழகம் தேர்தலில் போட்டியிடாது. ஆனால் யார் வரவேண்டும் என வெளிச்சம்போட்டு காட்டுவோம். இந்த மாநாடு சாதி, மத ஓழிப்பு குறித்த மாநாடு ஆகும்.
இவ்வாறு அவர் கூறினார். #KVeeramani #KaliPoongundran

பாம்பு வந்தால் எப்படி தடியைகொண்டு அடித்துவிரட்டுவோமோ அதேபோல் பா.ஜனதா, ஆர்.எஸ்.எஸ். எனும் பாம்பை அடித்துவிரட்டவேண்டும். பிரதமர் மோடி அளித்த வாக்குறுதியை நிறைவேற்றாமல் மக்களை ஏமாற்றிஉள்ளார்.

Next Story