என் மலர்

  செய்திகள்

  அனுமதியின்றி மது விற்ற முன்னாள் பெண் கவுன்சிலர் கைது - 90 பாட்டில்கள் பறிமுதல்
  X

  அனுமதியின்றி மது விற்ற முன்னாள் பெண் கவுன்சிலர் கைது - 90 பாட்டில்கள் பறிமுதல்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  குமரி மாவட்டத்தில் அனுமதியின்றி மது விற்ற முன்னாள் பெண் கவுன்சிலரை கைது செய்த போலீசார் 90 பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
  இரணியல்:

  குமரி மாவட்டத்தில் அனுமதியின்றி மது விற்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாத் உத்தரவிட்டிருந்தார்.

  அதன்படி நேற்று மாவட்டம் முழுவதும் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர். இரணியல் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் ராபர்ட் ஜெயன் மற்றும் போலீசார் நேற்று ரோந்துப்பணியில் ஈடுபட்டிருந்தனர்.

  அவர்கள் திங்கள்நகர் சந்தை அருகே வரும்போது அங்கு சந்தேகப்படும் படியாக பெண் ஒருவர் நின்று கொண்டிருந்தார். போலீசார் அவரிடம் விசாரணை நடத்தியபோது அவர் முன்னுக்குபின் முரணான தகவல்களை கூறினார்.

  இதில் சந்தேகம் அடைந்த போலீசார் மேலும் விசாரணை மேற்கொண்டனர். அதில் அவர் அதே பகுதியை சேர்ந்த சாந்தாகுமாரி (வயது 48) என்பது தெரியவந்தது. அந்த பகுதியில் அனுமதி இல்லாமல் மது விற்றதும் தெரியவந்தது.

  இதையடுத்து அவர் பதுக்கிவைத்திருந்த 90 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர். மேலும் அவரை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட சாந்தாகுமாரி முன்னாள் கவுன்சிலர் என்பது குறிப்பிடத்தக்கது.

  இதேபோல் பூதப்பாண்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சுந்தரமூர்த்தி மற்றும் போலீசார் ரோந்துபணியில் ஈடுபட்டிருந்தனர். அவர்கள் துவரங்காடு சந்திப்பில் வரும்போது அங்கு வாலிபர் ஒருவர் சந்தேகப்படும் படியாக நின்று கொண்டிருந்தார்.

  போலீசார் அவரிடம் விசாரணை மேற்கொண்ட போது அதில் அவர் அதே பகுதியை சேர்ந்த வள்ளி நாயகம் (40) என்பதும், அவர் அந்த பகுதியில் அனுமதியின்றி மது விற்றதும் தெரிய வந்தது.

  இதையடுத்து போலீசார் அவரை கைது செய்து அவரிடம் இருந்த 5 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர். போலீசார் தொடர்ந்து அனுமதியின்றி மது விற்பவர்களை கண்காணித்து அவர்களை கைது செய்து வருகின்றனர். #tamilnews
  Next Story
  ×