search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஸ்டாலின்-சந்திரபாபுநாயுடு சந்திப்பு பா.ஜனதாவை பதட்டம் அடைய வைத்துவிட்டது - கனிமொழி கருத்து
    X

    ஸ்டாலின்-சந்திரபாபுநாயுடு சந்திப்பு பா.ஜனதாவை பதட்டம் அடைய வைத்துவிட்டது - கனிமொழி கருத்து

    திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், ஆந்திர முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு சந்திப்பு பா.ஜனதாவை பதட்டம் அடைய வைத்துள்ளது என்று கனிமொழி எம்பி கருத்து தெரிவித்துள்ளார். #Kanimozhi #DMK #MKStalin #BJP
    சென்னை:

    பா.ஜனதாவுக்கு எதிராக புதிய கூட்டணி அமைக்க ஆந்திர முதல்-மந்திரி சந்திபாபு நாயுடு தீவிர முயற்சி எடுத்து வருகிறார்.

    இதற்காக டெல்லி சென்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை சந்தித்து பேசினார். இதனைதொடர்ந்து ஒவ்வொரு மாநிலமாக சென்று பா.ஜனதா அல்லாத கட்சித் தலைவர்களை சந்தித்து ஆதரவு திரட்டி வருகிறார்.

    கடந்த 2 நாட்களுக்கு முன்பு கர்நாடக மாநிலம் சென்று மதசார்பற்ற ஜனதா தள தலைவர் தேவே கவுடாவை சந்தித்தார்.சென்னையில் நேற்று மாலை தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினை சந்திரபாபு நாயுடு சந்தித்து விரிவாக ஆலோசனை நடத்தினார்.




    இந்த சந்திப்பு குறித்து கனிமொழி எம்.பி. டுவிட்டரில் பதிவிட்டுள்ள கருத்து வருமாறு:-

    தெலுங்கு தேசம் கட்சியின் தலைவர் சந்திரபாபுநாயுடு முன்னெடுத்து வரும் பா.ஜனதா எதிர்ப்பு கூட்டணிக்கான முயற்சிகள் பா.ஜனதாவை பதட்டம் அடைய வைத்துள்ளது. இந்தியாவின் மதசார்பற்ற தன்மையை பாதுகாக்க வேண்டியது காலத்தின் தேவை.

    தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கூறி உள்ளதை போல, மதவாத பா.ஜனதாவையும், ஊழல் அ.தி.மு.க.வையும் தோற்கடித்தே தீர வேண்டும். அனைத்து அரசியல் கட்சிகளும், தங்களுக்குள் உள்ள வேறுபாடுகளை மறந்து ஒன்றிணைய வேண்டும்.

    இவ்வாறு கனிமொழி கூறியுள்ளார். #Kanimozhi #DMK #MKStalin #BJP


    Next Story
    ×