search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருப்பரங்குன்றத்தில் அதிமுக 50 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறும்- அமைச்சர் வேலுமணி
    X

    திருப்பரங்குன்றத்தில் அதிமுக 50 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறும்- அமைச்சர் வேலுமணி

    திருப்பரங்குன்றம் தேர்தலில் அ.தி.மு.க. 50 ஆயிரம் ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெறும் என்று அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார். #ADMK #SPVelumani #Thirupparankundram
    கோவை:

    கோவை மாவட்ட அ.தி.மு.க. அலுவலகத்தில் அண்ணா டூரிஸ்ட் டாக்சிஓட்டுனர் தொழிலாளர் மற்றும் உரிமையாளர் சங்க தொடக்க விழா மற்றும் ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி கலந்து கொண்டார்.

    தமிழகத்திற்கு கனமழை ரெட் அலர்ட் விடுக்கப்பட்டு உள்ளது. இது தொடர்பாக முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உள்ளாட்சி துறை, வருவாய்துறை, நெடுஞ்சாலைத்துறை, பேரிடர் மேலாண்மை துறை உள்ளிட்ட அனைத்து துறைகளுடன் ஆலோசனை நடத்தி தயார் நிலையில் இருக்குமாறு உத்தரவிட்டு உள்ளார்.

    ஒவ்வொரு மாவட்டத்திற்கும் கண்காணிப்பு அதிகாரி நியமிக்கப்பட்டு உள்ளனர். சென்னையில் 15 மண்டலத்தில் ஒரு மண்டலத்திற்கு ஒரு ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் நியமிக்கப்பட்டு உள்ளனர்.

    இதே போல் அந்தந்த மாவட்டத்தில் கலெக்டர்கள் தேவையான நடவடிக்கை மேற்கொண்டு உள்ளனர்.

    மழையால் தேங்கும் நீரை உறிஞ்ச பம்பு செட், மரம் அறுக்கும் எந்திரம், ஜே.சி.பி. எந்திரம் தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளது. தூர்வாரும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளது.

    மழை அதிகமாக பெய்யும் இடங்களை கண்டறிந்து அதனை சமாளிக்கும் நிலை இருக்கிறது. பொது மக்களுக்கு தங்கும் இடங்கள், உணவு தயார் நிலையில் உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.


    அவரிடம் எடப்பாடி பழனிசாமி முதல்-அமைச்சர் ஆன போது நீங்கள் துணை முதல்-அமைச்சர் பதவி கேட்டதாக டி.டி.வி. தினகரன் கூறுகிறாரே என நிருபர்கள் கேட்ட கேள்விக்கு அமைச்சர் எஸ்.பி. வேலுமணி பதில் அளிக்கும் போது, டி.டி.வி. தினகரன் நிறைய காமெடி செய்கிறார். டி.டி.வி. தினகரனை கட்சியில் இருந்து விலக சொன்னது நானும் தங்கமணியும் தான்.

    திருப்பரங்குன்றம் தேர்தலில் அ.தி.மு.க. 50 ஆயிரம் ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெறும். ஆர்.கே. நகரில் 20 ரூபாய் நோட்டுகள் கொடுத்தது போல் திருப்பரங்குன்றத்தில் இது செல்லுபடியாகாது. தினகரன் கனவு பலிக்காது.

    எடப்பாடியும், ஒ.பி.எஸ்சும் அண்ணன்-தம்பியாக இருக்கிறார்கள்.

    தினகரன் 10 வருடங்கள் கட்சியில் இல்லை. அவர் பேசுவதற்கு எல்லாம் பதில் சொல்ல வேண்டியதில்லை. தினகரனுக்கு ஓ.பி.எஸ். முழுமையாக பதில் அளித்துள்ளார். தினகரன் பேசுவதை பொருட்படுத்த தேவையில்லை என்றார்.

    அவரிடம் துணை வேந்தர் நியமனத்தில் பணம் கைமாறியிருப்பதாக கவர்னர் பன்வாரிலால் குற்றம்சாட்டி உள்ளாரே? என கேட்டதற்கு அது பற்றி எனக்கு எதுவும் தெரியாது என்றார்.  #ADMK #SPVelumani #Thirupparankundram
    Next Story
    ×