search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விழிப்புணர்வு முகாமில் எஸ்.பி. பிரவேஷ்குமார் பேசிய காட்சி.
    X
    விழிப்புணர்வு முகாமில் எஸ்.பி. பிரவேஷ்குமார் பேசிய காட்சி.

    வேலூர் மாவட்டத்தில் கடந்த 10 மாதத்தில் சாலை விபத்தில் 370 பேர் பலி - எஸ்.பி. பிரவேஷ்குமார் தகவல்

    வேலூர் மாவட்டத்தில் இந்தாண்டில் இதுவரை நடந்த சாலை விபத்தில் 370 பேர் பலியானதாக எஸ்.பி. பிரவேஷ்குமார் தெரிவித்தார். #accident

    வேலூர்:

    வேலூர் மாவட்டத்தில் இந்தாண்டில் இதுவரை நடந்த சாலை விபத்தில் 370 பேர் பலியானதாக எஸ்.பி. பிரவேஷ்குமார் தெரிவித்தார்.

    சாலை விபத்துகளை குறைப்பது குறித்து விழிப்புணர்வு முகாம், வேலூர் கோட்டை சுற்றுச்சாலையில் உள்ள காவலர் மண்டபத்தில் இன்று நடந்தது. எஸ்.பி. பிரவேஷ் குமார் தலைமை தாங்கினார். வட்டார போக்குவரத்து அலுவலர் ராமகிருஷ்ணன், ஏ.டி.எஸ்.பி.க்கள் அதிவீரபாண்டியன், ஆசைதம்பி, டி.எஸ்.பி.க்கள் ஸ்ரீதரன், அலெக்ஸ், பெண்கள் வன் கொடுமை தடுப்பு பிரிவு டி.எஸ்.பி.க்கள் ஜெயசுப்பிரமணியன், ராதா கிருஷ்ணன் மற்றும் இன்ஸ்பெக்டர்கள் நாகராஜன் மற்றும் அசோகன் (தனிப்பிரிவு), மணி (வேலூர் போக்குவரத்து), சுந்தர மூர்த்தி (சத்துவாச்சாரி போக்குவரத்து) மற்றும் பள்ளி வாகன டிரைவர்கள், ஆட்டோ ஓட்டுனர்கள் என 500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

    கூட்டத்தில் எஸ்.பி. பிரவேஷ்குமார் பேசியதாவது:- சாலைகளை அனைவரும் பயன்படுத்துகிறோம். வேலூர் மாவட்டத்தில் இந்த ஆண்டில் இதுவரை நடந்த சாலை விபத்துகளில் மட்டும் 370 பேர் பலியாகியுள்ளனர். கடந்த ஆண்டை காட்டிலும் இந்தாண்டு விபத்தில் உயிர் இழப்புகள் குறைவு தான்.

    இந்தியாவில் 10 நிமிடத்திற்கு ஒருவர் விபத்தில் இறக்கின்றனர். சாலை விதிகளை மதித்து நடந்தாலே விபத்துகளை தவிர்க்கலாம். சாலை விதிகளை கடை பிடிக்க வேண்டும். குடித்து விட்டும், செல்போன் பேசிய படியும் வாகனங்களை ஓட்ட கூடாது.

    வாகனங்களை ஓட்டுபவர் தங்கள் குடும்ப நலனையும், எதிரே வரும் மற்ற வாகன ஓட்டிகளன் குடும்ப நலனையும் மனதில் வைத்து ஓட்ட வேண்டும் என்றார்.

    இதைத்தொடர்ந்து, ஏ.டி.எஸ்.பி. அதி வீரபாண்டியன் பேசுகையில், பள்ளி வாகனங்களில் டிரைவர்களும், உதவியாளர்களும் மாணவ, மாணவிகளிடம் பாதுகாப்போடு கவனமுடன் நடந்து கொள்ள வேண்டும். ‘குட் டச்... பேட் டச்’ தொடுதலில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

    ஊனமுற்ற மாணவ, மாணவிகளை வாகனங்களில் ஏற்றும் போது மட்டுமே உதவி செய்ய வேண்டும். அதுவும் சரியாக பிடித்து தவறான தொடுதல் இல்லாமல் உதவ வேண்டும்.

    தவறான தொடுதல் உள்ளிட்ட பாலியல் புகார் வந்தால், போக்சோ சட்டத்தில் கைது நடவடிக்கை எடுக்கப்படும். 50 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் தூக்கு தண்டனை போன்ற கடுமையான தண்டனைகளுக்கு போக்சோ சட்டப்பிரிவுகள் வழி வகுக்குகின்றன. கைதாகும் நபர்களின் குடும்பமே பாதிக்கப்படும் என்றார். #accident

    Next Story
    ×