search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கருணாநிதியின் உடல்நிலை குறித்து நேரில் கேட்டறிந்தார் மத்திய மந்திரி நிதின் கட்கரி
    X

    கருணாநிதியின் உடல்நிலை குறித்து நேரில் கேட்டறிந்தார் மத்திய மந்திரி நிதின் கட்கரி

    சென்னை காவிரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் தி.மு.க தலைவர் கருணாநிதியை சந்திக்க மத்திய மந்திரி நிதின் கட்கரி, தமிழிசை சவுந்திரராஜன் ஆகியோர் காவிரி மருத்துவமனைக்கு வந்துள்ளனர். #Karunanidhi #NitinGadkari #KauveryHosipital #DMK #GetWellKarunanidhi
    சென்னை:

    சென்னை காவிரி மருத்துவமனையில் உடல்நலக்குறைவால் தி.மு.க தலைவர் கருணாநிதி சிகிச்சை பெற்று வருகிறார். கடந்த 10 நாட்களாக அவர் சிகிச்சை பெற்று வரும் நிலையில், நேற்று முதல் அவரது உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டதாக வெளியான தகவல் தொண்டர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    தற்போது காவிரி மருத்துவமனை வெளியிட்டுள்ள அறிக்கையில், கருணாநிதியின் உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாகவும், அவரது முக்கிய உடல் உறுப்புகளின் செயல்பாடுகளை சீர்படுத்துவதில் சவால் ஏற்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது.



    இதையடுத்து, திமுக கட்சியின் தலைவர்களும், தொண்டர்களும் காவிரி மருத்துவமனைக்கு விரைந்து வருகின்றனர். அதேசமயம் ஏற்கனவே மத்திய மந்திரி நிதின் கட்கரி கருணாநிதியை சந்திக்க வருவதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

    அதன்படி, விமானம் மூலம் சென்னை வந்தடைந்த மத்திய மந்திரி நிதின் கட்கரி காவிரி மருத்துவமனைக்கு விரைந்தார். அவருடன் தமிழக பா.ஜ.க தலைவர் தமிழிசையும் காவிரி மருத்துவமனைக்கு வந்துள்ளார். அங்கு சென்ற அவர்கள் காவிரி மருத்துவமனையில் இருந்த மு.க ஸ்டாலின் உள்ளிட்ட கருணாநிதியின் குடும்பத்தினரிடம் அவரது உடல்நிலைக் குறித்து கேட்டறிந்தார்.

    இதைத்தொடர்ந்து, காவிரி மருத்துவமனையில் தொண்டர்களின் வருகை அதிகரித்துள்ளதால் அங்கு போலீசார் குவிக்கப்பட்டு, பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளது. #Karunanidhi #NitinGadkari #KauveryHosipital #DMK #GetWellKarunanidhi
    Next Story
    ×