search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அயனாவரத்தில் வளர்ப்பு நாய்களால் உயிர் தப்பிய ரவுடி
    X

    அயனாவரத்தில் வளர்ப்பு நாய்களால் உயிர் தப்பிய ரவுடி

    அயனாவரத்தில் ஆசையாய் வளர்த்த முதலாளியை விசுவாசத்துடன் செயல்பட்டு நாய்கள் காப்பாற்றிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
    அம்பத்தூர்:

    அயனாவரம் கே.கே.நகரை சேர்ந்த கார்த்திக் என்ற ரவுடியை வெட்டிக்கொலை செய்ய முயன்ற வாலிபர் சஞ்சீவ் குமார் (21) கைது செய்யப்பட்டார்.

    இரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த தலைமை செயலக காலனி போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜேஸ்வரி கத்தியுடன் பதுங்கி இருந்த சஞ்சீவ் குமாரை மடக்கி பிடித்து கைது செய்தார். போலீஸ் கமி‌ஷனர் ஏ.கே.விஸ்வநாதன் இதற்கு பாராட்டு தெரிவித்துள்ளார்.

    இந்த நிலையில் கார்த்திக்கை, சஞ்சீவ்குமார் அரிவாளால் வெட்டிய போது அவரது வளர்ப்பு நாய்களே உயிரை காப்பாற்றி இருப்பது தெரியவந்துள்ளது.

    அயனாவரம் கே.கே.நகரில் உள்ள தனது வீட்டு முன்பு நின்று கொண்டிருந்த போதுதான் கார்த்திக்கை சஞ்சீவ்குமார், தனது கூட்டாளி ஒருவருடன் வந்து கொலை செய்ய முயற்சி செய்தான். அப்போது கார்த்திக்கை இருவரும் சேர்ந்து சரமாரியாக அரிவாளால் வெட்டினர். இதனை கார்த்திக்கின் வீட்டில் இருந்த வளர்ப்பு நாய்கள் பார்த்துவிட்டன. உடனடியாக அங்கிருந்த 2 நாய்களும் சஞ்சீவ் குமாரையும், அவனது கூட்டாளியையும் கடிப்பதற்காக ஓடின. இதனால் பயந்துபோன இருவரும் அங்கிருந்து தலை தெறிக்க ஓட்டம் பிடித்தனர்.

    நாய்கள் மட்டும் கவனிக்காமல் இருந்திருந்தால் கார்த்திக் உயிர் தப்பி இருக்க மாட்டார் என்று அவரது உறவினர்கள் தெரிவித்தனர். ஆசையாய் வளர்த்த முதலாளியை விசுவாசத்துடன் செயல்பட்டு நாய்கள் காப்பாற்றிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. #Tamilnews
    Next Story
    ×