என் மலர்

  செய்திகள்

  கோடை விடுமுறையில் சிறப்பு வகுப்புகள் நடத்தும் பள்ளிகள் மீது நடவடிக்கை- கலெக்டர் எச்சரிக்கை
  X

  கோடை விடுமுறையில் சிறப்பு வகுப்புகள் நடத்தும் பள்ளிகள் மீது நடவடிக்கை- கலெக்டர் எச்சரிக்கை

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  திருச்சி மாவட்டத்தில் கோடை விடுமுறையில் சிறப்பு வகுப்புகள் நடத்தும் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் ராசாமணி எச்சரிக்கை விடுத்து உள்ளார்.
  திருச்சி:

  திருச்சி மாவட்டத்தில் கோடை விடுமுறையில் சிறப்பு வகுப்புகள் நடத்தும் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் ராசாமணி எச்சரிக்கை விடுத்து உள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது:-

  திருச்சி மாவட்டத்தில் 11, 12 மற்றும் 10-ம் வகுப்பு அரசு பொது தேர்வுகள் நடத்தி முடிக்கப்பட்டு தற்போது கோடை விடுமுறை விடப்பட்டு உள்ளது. கோடை விடுமுறை காலத்தில் பள்ளிகளில் சிறப்பு வகுப்புகளோ அல்லது வேறு எந்த வகையிலோ பாடம் நடத்தக்கூடாது என தமிழக அரசு ஏற்கனவே அறிவுரை வழங்கி உள்ளது. இந்த அறிவுரையை மீறி சில பள்ளி நிர்வாகங்கள் செயல்படுவதாக மாவட்ட நிர்வாகத்தின் கவனத்துக்கு சுட்டிக்காட்டப்பட்டு உள்ளது. அரசு பள்ளிகளாக இருந்தாலும், தனியார் பள்ளிகளாக இருந்தாலும் அரசின் அறிவுரையை மீறி செயல்பட்டால் அவற்றின் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

  பள்ளிகளை பொறுத்தவரை குழந்தைகள் மற்றும் மாணவர்களின் பாதுகாப்பு மிகவும் முக்கியமானது என்பதால் அரசு மற்றும் மெட்ரிக், சி.பி.எஸ்.இ. பள்ளிகள் உறுதியாக இருக்கிறதா? அந்த பள்ளிகளில் உரிய தீ தடுப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளதா? என்பதை அறிவதற்காக பொதுப்பணித்துறை, தீயணைப்பு துறை, வருவாய்த்துறை மற்றும் கல்வி துறை அதிகாரிகள் கொண்ட ஒரு குழு அமைக்கப்பட்டு அந்த குழுவினர் மாவட்டம் முழுவதும் உள்ள பள்ளிகளை ஆய்வு செய்து வருகிறார்கள். இம்மாத இறுதிக்குள் இந்த குழுவின் ஆய்வறிக்கையை மாவட்ட நிர்வாகத்திடம் ஒப்படைக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார். #tamilnews
  Next Story
  ×