என் மலர்

  செய்திகள்

  பாஜக அதிருப்தியாளர்கள் யஷ்வந்த் சின்கா, சத்ருகன் சின்ஹா ஆகியோர் ஸ்டாலினுடன் சந்திப்பு
  X

  பாஜக அதிருப்தியாளர்கள் யஷ்வந்த் சின்கா, சத்ருகன் சின்ஹா ஆகியோர் ஸ்டாலினுடன் சந்திப்பு

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  பாஜக அதிருப்தியாளர்களான யஷ்வந்த் சின்ஹா மற்றும் சத்ருகன் சின்ஹா ஆகியோர் திமுக செயல் தலைவர் ஸ்டாலினை சந்தித்து ஆலோசனை நடத்தினர். #MKStalin #YashwanthSinha #ShatrughanSinha
  சென்னை:

  காங்கிரஸ், பா.ஜ.க. அல்லாத மூன்றாவது அணியை உருவாக்கும் முயற்சியில் தெலுங்கானா முதல் மந்திரி சந்திரசேகர் ராவ் ஈடுபட்டு வருகிறார்.

  இதுதொடர்பாக அவர் மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜியை சந்தித்தார். மேலும், திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலினிடம் ஆலோசனை நடத்த சந்திரசேகர் ராவ் சென்னை வந்தார். கோபாலபுரம் சென்ற அவர், திமுக தலைவர் கருணாநிதியை சந்தித்து உடல்நலம் விசாரித்தார். அதன்பின் ஸ்டாலின், கனிமொழி ஆகியோரை சந்தித்து ஆலோசனை நடத்தினார்.  இந்நிலையில், பாஜக அதிருப்தியாளர்களான முன்னாள் மத்திய மந்திரி யஷ்வந்த் சின்ஹா மற்றும் சத்ருகன் சின்ஹா ஆகியோர் சென்னை ஆழ்வார்ப்பேட்டையில் திமுக செயல் தலைவர் ஸ்டாலினை இன்று சந்தித்தனர்.

  ஆழ்வார்பேட்டையில் உள்ள ஸ்டாலின் வீட்டுக்கு சென்ற அவர்களை ஸ்டாலின் வரவேற்று அழைத்துச் சென்றார். அதன்பின்னர் அவர்கள் பேச்சுவார்த்தை நடத்தினர். #MKStalin #YashwanthSinha #ShatrughanSinha
  Next Story
  ×