search icon
என் மலர்tooltip icon

  செய்திகள்

  டாஸ்மாக் கடைகளை மூட அரசு முன்வர வேண்டும் - வைகோ, அன்புமணி கோரிக்கை
  X

  டாஸ்மாக் கடைகளை மூட அரசு முன்வர வேண்டும் - வைகோ, அன்புமணி கோரிக்கை

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  மதுக்கடைகளை மூடுவதற்கு அரசு தாமதிக்காமல் முன்வர வேண்டும் என்று நெல்லை மாணவர் தற்கொலைக்குப் பிறகு வைகோ, அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தி உள்ளனர். #TASMAC #Vaiko #AnbumaniRamadoss
  சென்னை:

  தந்தை மதுபழக்கம் காரணமாக நெல்லையில் மாணவர் தினேஷ் தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ திருச்சி விமான நிலையத்தில் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-

  தந்தையின் குடிபழக்கத்தால் நெல்லையில் பிளஸ்- 2 மாணவன் தினேஷ் தற்கொலை செய்த சம்பவத்தை அறிந்து மிகவும் வருத்தமடைந்தேன். இனிமேலும் மதுவால் யாரும் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும் என்ற நோக்கத்தில் அவன் தற்கொலை செய்துள்ளான். தற்கொலை செய்வது வருத்தம் அளிக்கக் கூடியது. எதுவாக இருந்தாலும் வாழ்ந்து போராட வேண்டும். டாஸ்மாக் கடைகளை எதிர்த்து தினேஷ் போராடியிருக்கலாம்.

  டாஸ்மாக் கடைகளால் லட்சக்கணக்கான குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. சிறுமிகளை கூட நாசமாக்கி விடுகின்றனர். தந்தை குடித்துவிட்டு மீதி வைக்கும் மதுவை மாணவர்கள் எடுத்து குடிக்கின்றனர். இதனால் பள்ளி- கல்லூரிகளுக்கு மது குடித்துவிட்டு செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.

  இருப்பினும் மதுவை எதிர்த்து நான் மேற்கொண்ட மராத்தானில் ஏராளமான மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். 5 சதவீத மாணவர்கள் மட்டுமே மது குடிக்கின்றனர். மீதி 95 சதவீதம் பேர் குடிக்கவில்லை.

  டாஸ்மாக் கடைகள் குடிக்காதவர்களையும் குடிக்க வைப்பதாக உள்ளது. மாணவன் தினேஷ் தற்கொலைக்கு பிறகாவது டாஸ்மாக் கடைகளை மூட அரசு முன்வர வேண்டும். எனது தாய் 100 வயதிலும் மதுவை எதிர்த்து போராடி இறந்தார்.

  இவ்வாறு அவர் கூறினார்.

  பா.ம.க. இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-  மதுவுக்கு அடிமையான தந்தையை மீட்க முடியாததால் குடும்பம் சீரழிவதை சகித்து கொள்ள முடியாமல், தினேஷ் என்ற மாணவர் நெல்லை வண்ணாரப்பேட்டை ரெயில்வே பாலத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டிருப்பது அதிர்ச்சியும், வேதனையும் அளிக்கிறது.

  நெல்லை மாவட்டம் குருக்கள்பட்டியைச் சேர்ந்த மாடசாமி மீட்க முடியாத அளவுக்கு மதுப்பழக்கத்திற்கு ஆளாகியிருந்தார். இதனால் அவரது குடும்பம் சீரழிவுப் பாதையில் சென்று கொண்டிருந்தது. மாடசாமியின் மதுப்பழக்கத்தால் குடும்பத்தின் நிம்மதி, பொருளாதாரம், கல்வி உள்ளிட்டவை பாதிக்கப்பட்டது.

  இதற்குக் காரணமான மதுப் பழக்கத்தை கைவிடும்படி மாடசாமியிடம், 12ஆம் வகுப்பு முடித்து மருத்துவப் படிப்பு படிக்க ஆயத்தமாகி வரும் அவரது மகன் தினேஷ் மன்றாடியிருக்கிறார். ஆனால், அதை அவரது தந்தை பொருட்படுத்தாததால் மனம் உடைந்த மாணவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்.

  சமூகத்தையும், குடும்பத்தையும் காப்பாற்ற வேண்டிய ஒரு உயிர் மதுவின் தீமையால் பறிபோயிருக்கிறது. மாணவன் தினேஷின் தற்கொலைக்கு அவரது தந்தை மாடசாமி மட்டும் காரணமல்ல; தெருவுக்குத் தெரு மதுக்கடைகளை திறந்து லட்சக்கணக்கான குடும்பங்களை சீரழித்து வரும் எடப்பாடி பழனிச்சாமியும் தான் பொறுப்பேற்க வேண்டும். பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும்.

  அதுமட்டுமின்றி, உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிராகவும், சென்னை உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பை மறைத்தும் நெடுஞ்சாலைகளில் 1300 மதுக்கடைகளை அரசு திறந்தது. அதையும் எதிர்த்து பா.ம.க. சட்டப் போராட்டம் நடத்தி புதிதாக திறக்கப்பட்ட மதுக்கடைகளை மூடியது.

  இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு அவசரம் அவசரமாக மேல் முறையீடு செய்துள்ளது. மதுக்கடைகளை மூடுவதில் காட்டிய ஆர்வத்தை காவிரிப் பிரச்சினையில் காட்டியிருந்தால் எப்போதோ அப்பிரச்சினை தீர்க்கப்பட்டிருக்கும்.

  மாணவர் தினேஷின் தற்கொலை ஆட்சியாளர்களின் மனசாட்சியை தட்டி எழுப்ப வேண்டும். இனியும் தாமதிக்காமல் தமிழகத்தில் முழு மதுவிலக்கை நடைமுறைப்படுத்த வேண்டும்.

  அரசின் முடிவுக்காக காத்திருக்காமல், மதுவிலக்கு நடைமுறையானால் மது ஆலைகள் தானாக மூடப்பட்டு விடும் என்று வெட்டி வாதங்களைப் பேசிக் கொண்டிருக்காமல் திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளைச் சேர்ந்தவர்களால் நடத்தப்படும் மது ஆலைகளை உடனே மூட அக்கட்சிகளின் தலைமைகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

  இவ்வாறு அதில் கூறியுள்ளார். #StudentSuicide #TASMAC #Vaiko #AnbumaniRamadoss
  Next Story
  ×