என் மலர்
செய்திகள்

தமிழகத்துக்கு தண்ணீர் தர மறுக்கும் சித்தராமையா அரசு தொடரக்கூடாது - பொன்.ராதாகிருஷ்ணன்
தமிழகத்துக்கு தண்ணீர் தர மறுக்கும் சித்தராமையா அரசு தொடரக்கூடாது என்று மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார். #CauveryMangementBoard #Ponradhakrishnan
ஆலந்தூர்:
மத்திய மந்திரி பொன். ராதாகிருஷ்ணன் சென்னை விமான நிலையத்தில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
கர்நாடக மாநில தேர்தல் பணிக்காக சென்று கொண்டிருக்கிறேன். தமிழகத்துக்கு ஒரு சொட்டு தண்ணீர் கூட தரமாட்டேன் என்று சொன்ன காங்கிரஸ் கட்சியின் முதல்-மந்திரி சித்தராமையாவின் அரசு கர்நாடகத்தில் தொடரக் கூடாது. அது தொடர்வது 2 மாநிலத்துக்கும் தீங்கு விளைவிக்கும்.

சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்பவர்களுக்கு தூக்கு தண்டனை வழங்கும் அவசர சட்டத்துக்கு பிரதமர் மோடியின் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது மகிழ்ச்சியான விஷயம்.
காவிரி மேலாண்மை வாரியம் தொடர்பாக மே 3-ந்தேதிக்குள் மத்திய அரசு வரைவு அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு கூறியுள்ளது. அதை பொறுத்திருந்து பார்ப்போம். தமிழ் நாட்டுக்கு சாதகமான நல்ல முடிவு அமையும்.
இவ்வாறு அவர் கூறினார். #CauveryMangementBoard #Ponradhakrishnan

Next Story