என் மலர்tooltip icon

    செய்திகள்

    எழிலரசன் எம்.எல்.ஏ. வீடு
    X
    எழிலரசன் எம்.எல்.ஏ. வீடு

    காஞ்சீபுரத்தில் தி.மு.க.வினர் வீடுகளில் கருப்பு கொடி ஏற்றினர்

    பிரதமர் மோடியின் சென்னை வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து காஞ்சீபுரத்தில் தி.மு.க.வினர் வீடுகளில் கருப்பு கொடி ஏற்றி இருந்தனர்.
    காஞ்சீபுரம்:

    பிரதமர் மோடியின் சென்னை வருகைக்கு பல்வேறு அரசியல் கட்சியினர், தமிழ் அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    காஞ்சீபுரத்தில் தி.மு.க.வினர் தங்களது வீடுகள் மற்றும் கட்சி அலுவலகங்களில் கருப்பு கொடி ஏற்றி எதிர்ப்பு தெரிவித்தனர்.

    காஞ்சீபுரம் மாவட்ட செயலாளர் சுந்தர் எம்.எல்.ஏ., எழிலரசன் எம்.எல்.ஏ. ஆகியோரின் வீடுகள் மற்றும் நகர ஒன்றிய நிர்வாகிகளின் வீடுகள் மற்றும் சின்ன காஞ்சீபுரம் மற்றும் மேட்டுத் தெரு பகுதிகளில் உள்ள திமுக அலுவலகங்கள் என மாவட்டம் முழுவதும் திமுகவினர் வீடுகளிலும், கட்சி அலுவலகங்கள் உள்ளிட்ட இடங்களிலும் பிரதமரின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து கருப்புக் கொடி ஏற்றி இருந்தனர்,

    பிரதமர் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து பொன்னேரி பழைய பஸ் நிலையம், புதிய பஸ் நிலையம், தேரடி தெரு பகுதிகளில் தி.மு.க.வினர் கருப்பு கொடி ஏற்றி இருந்தனர்.
    Next Story
    ×