என் மலர்

  செய்திகள்

  கலெக்டர் அலுவலகம் முன்பு குடிநீர் கேட்டு பொதுமக்கள் தர்ணா போராட்டம்
  X

  கலெக்டர் அலுவலகம் முன்பு குடிநீர் கேட்டு பொதுமக்கள் தர்ணா போராட்டம்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் சேலம் கலெக்டர் அலுவலகம் முன்பு பொதுமக்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
  சேலம்:

  சேலம் கலெக்டர் அலுவலகம் முன்பு குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் பொதுமக்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

  சேலம் பனமரத்துப்பட்டி அருகே உள்ள நூலாத்து கோம்பை பகுதியில் பழங்குடியின குடும்பங்கள் சுமார் 150 உள்ளன. இப்பகுதியில் பல மாதங்களாக குடிநீர் வரவில்லை என தெரிகிறது.

  இது குறித்து பனமரத்துப்பட்டி ஊராட்சி ஒன்றிய ஆணையாளரிடமும், வேடப்பட்டி ஊராட்சி செயலாளரிடமும் மனு கொடுத்தனர். ஆனால் அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என தெரிகிறது.

  இதனால் கோபமும் விரக்தியும் அடைந்த அப்பகுதி மக்கள் சுமார் 20 பேர் காலிகுடங்களுடன் இன்று காலை கலெக்டர் அலுவலகம் முன்பு திரண்டு திடீரென தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த திடீர் போராட்டத்தால் பரபரப்பு ஏற்பட்டது.

  உடனே கலெக்டர் அலுவலக நுழைவு வாயிலில் நின்ற டவுன் போலீசார் ஓடி வந்து அவர்களிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.

  எங்கள் பகுதிக்கு கடந்த பல மாதங்களாக குடிநீர் விநியோகம் செய்யப்படாததால் குழந்தைகள், பள்ளி, கல்லூரிக்கு செல்லும் மாணவ- மாணவிகள் குடிப்பதற்கு தண்ணீர் இல்லாமல் சிரமம் அடைந்துள்ளனர்.

  நாங்கள் பல கிலோ மீட்டர் நடந்து சென்று அருகில் உள்ள கிராமத்தில் இருந்து குடிநீர் எடுத்து வந்து பயன்படுத்தி வருகிறோம். எங்கள் பகுதிக்கு உடனடியாக தண்ணீர் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

  இவ்வாறு அவர்கள் கூறினர்.

  அதற்கு போலீசார் நீங்கள் அனைவரும் கலெக்டரிடம் சென்று இது குறித்து மனு கொடுங்கள். அவர் உரிய நடவடிக்கை எடுப்பார் எனக்கூறி கலெக்டர் அலுவலகத்திற்குள் அனுப்பி வைத்தனர்.
  Next Story
  ×