என் மலர்

  செய்திகள்

  65-வது பிறந்த நாள்: மு.க.ஸ்டாலின் மார்ச் 1-ந்தேதி தொண்டர்களிடம் வாழ்த்து பெறுகிறார்
  X

  65-வது பிறந்த நாள்: மு.க.ஸ்டாலின் மார்ச் 1-ந்தேதி தொண்டர்களிடம் வாழ்த்து பெறுகிறார்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் வருகிற மார்ச் 1-ந்தேதி தனது 65-வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். அன்று அண்ணா அறிவாலயத்தில் தொண்டர்களின் வாழ்த்தை பெறுகிறார்.
  சென்னை:

  தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் வருகிற மார்ச் 1-ந்தேதி தனது 65-வது பிறந்த நாளை கொண்டாடுகிறார்.

  பிறந்த நாளையொட்டி அவர் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களிடம் வாழ்த்து பெறுகிறார்.

  மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் விழா நிகழ்ச்சிகள் பற்றிய விவரங்களை சென்னை மேற்கு மாவட்ட தி.மு.க. வெளியிட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு:-

  மார்ச் 1-ந்தேதி காலை 7 மணிக்கு மெரினா கடற்கரையில் உள்ள அறிஞர் அண்ணா நினைவிடத்தில் மு.க.ஸ்டாலின் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்துகிறார். காலை 7.15 மணிக்கு வேப்பேரியில் உள்ள தந்தை பெரியார் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்துகிறார்.

  பின்னர் காலை 8 மணிக்கு அண்ணா அறிவாலயம் கலைஞர் அரங்கத்தில் வாழ்த்து பெறும் நிகழ்ச்சி நடக்கிறது. இதில் மு.க.ஸ்டாலின் பங்கேற்று முக்கிய பிரமுகர்கள், கட்சி நிர்வாகிகள், தொண்டர்களின் வாழ்த்தை பெறுகிறார். #Tamilnews
  Next Story
  ×