என் மலர்
செய்திகள்

குறிஞ்சிப்பாடி அருகே விவசாயி மீது தாக்குதல்: 2 வீடுகள் சூறை - 11 பேர் கைது
குறிஞ்சிப்பாடி அருகே விவசாயி மீது தாக்குதல் நடத்தி வீட்டை சூறையாடியது தொடர்பாக 11 பேரை போலீசார் கைது செய்தனர்.
குறிஞ்சிப்பாடி:
கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி அருகே உள்ள மண்டபம்மேட்டுக்குப்பம் பகுதியைச் சேர்ந்தவர் தங்கராசு(வயது 42). விவசாயி. இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த செல்வம் என்பவருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்தது.
நேற்று தங்கராசு வயலுக்கு சென்றுகொண்டிருந்தார். அப்போது செல்வமும், அதே பகுதியை சேர்ந்த லட்சுமணனும் சேர்ந்து தங்கராசுவை தாக்கினர்.
இதுகுறித்து அவர் தனது உறவினர்களிடம் கூறினார். உடனே அவரது உறவினர்கள் ராஜேந்திரன், அருள்மொழி, ராஜசேகர் உள்பட 11 பேர் மண்டபம் மேட்டுக்குப்பம் பகுதியில் திரண்டனர். அவர்கள் அங்குள்ள செல்வம், லட்சுமணன் ஆகியோர் வீடுகளின் ஓடுகளை அடித்து உடைத்தனர்.
பின்னர் வீட்டிற்குள் புகுந்து அங்கிருந்த டி.வி, பிரிட்ஜ் மற்றும் அனைத்து பொருட்களையும் அடித்து நொறுக்கி சூறையாடிவிட்டு சென்றுவிட்டனர்.
இதுகுறித்து குறிஞ்சிப்பாடி போலீஸ் நிலையத்தில் செல்வம், லட்சுமணன் ஆகியோர் புகார் செய்தனர். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். வீடுகளை சூறையாடிய ராஜேந்திரன், அருள்மொழி, ராஜசேகர், அரிதாஸ், சேதுபதி உள்பட 11 பேரை கைது செய்தனர்.
இதேபோல் தங்கராசு கொடுத்த புகாரின்பேரில் சசிதரன், தாமோதரன், சண்முகம், மாயவேல் உள்பட 7 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். #tamilnews

Next Story