என் மலர்

  செய்திகள்

  பல்லடம் அருகே ஆம்னி பஸ் மோதி விவசாயி பலி
  X

  பல்லடம் அருகே ஆம்னி பஸ் மோதி விவசாயி பலி

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  பல்லடம் அருகே மொபட் மீது ஆம்னி பஸ் மோதி விவசாயி பலியானார். இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

  பல்லடம்:

  பல்லடம் அருகே உள்ள வாவி பாளையம் ஊராட்சி கொசுவம் பாளையத்தை சேர்ந்தவர் தண்டபாணி (65). விவசாயி. இவர் தனது மொபட்டை அங்குள்ள இரு சக்கர வாகன நிறுத்தத்தில் நிறுத்தி விட்டு வெளியூர் சென்று இருந்தார். நேற்று இரவு இவர் ஊர் திரும்பினார். இரவு 10.30 மணியளவில் இரு சக்கர வாகன நிறுத்தத்தில் இருந்து தனது மொபட்டை எடுத்து கொண்டு பல்லடம்- உடுமலை மெயின் ரோடு பகுதியில் சென்று கொண்டிருந்தார்.

  அப்போது மூணாறில் இருந்து பெங்களூர் சென்ற தனியார் ஆம்னி பஸ் மொபட் மீது மோதியது. இதில் விவசாயி தண்டபாணி தூக்கி வீசப்பட்டார். பலத்த காயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பலியானார்.

  விபத்து குறித்து காமநாயக்கன் பாளையம் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

  Next Story
  ×