என் மலர்
செய்திகள்

கர்நாடகாவுக்கு ரேஷன் அரிசி கடத்தல்: குண்டர் சட்டத்தில் வாலிபர் கைது
அந்தியூர் அருகே ரேஷன் அரிசி கடத்திய வழக்கில் வாலிபரை குண்டர் சட்டத்தில் போலீசார் கைது செய்தனர்.
ஈரோடு:
அந்தியூர் அடுத்த அம்மன் பாளையத்தில் உள்ள சாணார் தோட்டத்தில் 16 ஆயிரம் கிலோ ரேஷன் அரிசி பதுக்கி வைக்கபட்டு கர்நாடக மாநிலத்துக்கு கடத்திய வழக்கில் அந்தியூர் சிந்தகவுண்டன் பாளையம், எட்டிக்குட்டை பாளையத்தை சேர்ந்த பிரகாஷ்(வயது 32) என்பரை போலீசார் கைது செய்து ஈரோடு கிளை சிறையில் அடைத்தனர்.
இந்நிலையில் தொடர்ந்து ரேஷன் அரிசி கடத்தலில் ஈடுபட்டு வந்ததால் பிரகாசை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய போலீசார் பரிந்துரை செய்தனர்.
இதையடுத்து பிரகாசை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய கலெக்டர் பிரபாகர் உத்தரவிட்டார். xஇதையடுத்து பிரகாஷ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். #tamilnews
Next Story






