என் மலர்

  செய்திகள்

  திருமணம் செய்வதை தவிர்க்க காதலனை வெளிநாட்டுக்கு அனுப்பிய பெற்றோர்: இளம்பெண் புகார்
  X

  திருமணம் செய்வதை தவிர்க்க காதலனை வெளிநாட்டுக்கு அனுப்பிய பெற்றோர்: இளம்பெண் புகார்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  காதலியை திருமணம் செய்ய மறுத்த வாலிபர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

  மதுரை:

  மேலூர் அருகில் உள்ள ஆமூர் மாங்குளம் தெற்கு தெருவை சேர்ந்த பொன்னையா மகள் சுகுணா (வயது 22). இவரும் அதே பகுதியை சேர்ந்த சுசி (27) என்பவரும் ஒருவரையொருவர் காதலித்தனர்.

  இவர்களை சுசியின் பெற்றோர் அர்ஜூன்- போதும் பொண்ணுக்கு பிடிக்கவில்லை. எனவே சுசியை வெளிநாட்டு வேலைக்கு அனுப்பி விட்ட னர்.

  இந்த நிலையில் சுசி சமீபத்தில் நாடு திரும்பினார். இதையடுத்து அவரை நேரில் சந்தித்த சுகுணா, தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி கேட்டார்.

  சுசி மறுப்பு தெரிவித்து உள்ளார். மேலும் பெற்றோருடன் சேர்ந்து கொலை மிரட்டல் விடுத்ததாகவும் தெரிகிறது.

  இதுதொடர்பாக சுகுணா மேலூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் விஜயலட்சுமி வாலிபர் சுசி, அவரது பெற்றோர் அர்ஜூன்-போதும் பொண்ணு ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

  Next Story
  ×