என் மலர்tooltip icon

    செய்திகள்

    அறந்தாங்கி அருகே குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல்
    X

    அறந்தாங்கி அருகே குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல்

    அறந்தாங்கி அருகே குடிநீர் கேட்டு பொதுமக்கள் காலி குடங்களுடன் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர்.
    அறந்தாங்கி:

    ஆவுடையார் கோவில் ஒன்றியம் பழவரசன் ஊராட்சி  உதயமாணிக்கம், கண்ணுடையான் கோட்டை, மாகானியேந்தல், இடைக்கி வயல் உள்ளிட்ட பகுதிகளில் 500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். 

    இப்பகுதிகளுக்கு உதயமாணிக்கம் பகுதிகளிலிருந்து கூட்டு குடிநீர் திட்டத்தின் மூலம் குடிநீர் விநியோகிப்பட்டு வருகிறது. இந்நிலையில் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு குடிநீர் குழாயில் பழுது ஏற்பட்டது. இதனால் பழவரசன் ஊராட்சி பகுதிகளுக்கு குடிநீர் விநியோகம் நிறுத்தப்பட்டது. ஆனால் அதிகாரிகள் குடிநீர் கிடைக்க எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. 

    இதனை கண்டித்து பழவசரன் ஊராட்சி பொதுமக்கள் நாகுடி - ஆவுடையார் பகுதி நெடுஞ்சாலையில் காலி குடங்களுடன் இன்று திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனை அறிந்த அதிகாரிகள் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி குடிநீர் வழங்க ஏற்பாடு செய்வதாக உறுதி கூறினர். இதையடுத்து பொதுமக்கள் மறியலை கைவிட்டனர். 
    Next Story
    ×