என் மலர்

    செய்திகள்

    மணல் குவாரிகளை மூட உத்தரவு: மனித நேய மக்கள் கட்சி வரவேற்பு
    X

    மணல் குவாரிகளை மூட உத்தரவு: மனித நேய மக்கள் கட்சி வரவேற்பு

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    மணல் குவாரிகளை ஆறு மாதங்களில் மூட வேண்டும் என்ற உச்சநீதிமன்றத்தின் உத்தரவை மனித நேய மக்கள் கட்சி சார்பில் வரவேற்பதாக ஜவாஹிருல்லா தெரிவித்துள்ளார்.
    சென்னை:

    மனித நேய மக்கள் கட்சி தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    மணல் குவாரிகளை ஆறு மாதங்களில் மூட வேண்டும் என்ற உச்சநீதிமன்றத்தின் உத்தரவை மனித நேய மக்கள் கட்சி சார்பில் வரவேற்கின்றேன்.

    மணல் குவாரிகள் என்ற பெயரில் நதிகளின் நாடி நரம்புவரை சென்று மணலைக் கொள்ளையடித்து வந்த மணல் மாபியாக்களுக்கு சம்மட்டி அடியை நீதிமன்றம் வழங்கியுள்ளது.

    மணல் குவாரிகளால் குடிநீர் ஆதாரம் பாதிக்கப்பட்டு, நிலத்தடி நீர் குறைந்து, விவசாயமும் பாதிக்கப்பட்டு வந்த நிலையில் இதுபோன்ற ஒரு நீதிமன்றத் தீர்ப்பு மணல் கொள்ளைக்கு எதிராகப் போராடும் சுற்றுச்சூழல் ஆர்வலர்களுக்கு ஊந்து சக்தியாக அமைந்துள்ளது.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
    Next Story
    ×