என் மலர்
செய்திகள்

தேனியில் பலத்த மழை - பெரியாறு அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு
நீர்பிடிப்பு பகுதியில் மழை பெய்து வருவதால் பெரியாறு அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.
கூடலூர்:
தேனி மாவட்டம் கூடலூர் அருகே கேரள எல்லையில் அமைந்துள்ள முல்லைபெரியாறு அணை மூலம் கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் 14,707 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. மேலும் தேனி, மதுரை மாவட்ட குடிநீர் ஆதாரமாக விளங்குகிறது.
கடந்த 2 ஆண்டுகளாக வறட்சியின் காரணமாக பாசனத்திற்கு தாமதமாகவே தண்ணீர் திறக்கப்பட்டது. தற்போது வடகிழக்கு பருவமழை ஓரளவு கைகொடுத்து வருவதால் நீர்பிடிப்பு பகுதியில் கடந்த 3 நாட்களாக மழை பெய்து வருகிறது. எனவே அணைக்கு 1252 கனஅடிநீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 1258 கனஅடி நீர் திறக்கப்படுகிறது. அணையின் நீர்மட்டம் 122 அடியாக உள்ளது.
வைகை அணையின் நீர்மட்டம் 55.68 அடியாக உள்ளது. 889 கனஅடிநீர் வருகிறது. 960 கனஅடிநீர் பாசனம் மற்றும் குடிநீருக்காக திறக்கப்படுகிறது. மஞ்சளாறு அணை நீர்மட்டம் 46.75 அடியாக உள்ளது. 3 கனஅடிநீர் வருகிறது. 100 கனஅடிநீர் திறக்கப்படுகிறது.
சோத்துப்பாறை அணை நீர்மட்டம் 121.68 அடியாக உள்ளது. வரும் 30 கனஅடிநீர் அப்படியே திறந்துவிடப்படுகிறது.
தேனி மாவட்டத்தில் பரவலாக பலத்த மழை பெய்துள்ளது. பெரியாறு 12, தேக்கடி 1.8, கூடலூர் 6.5, சண்முகாநதிஅணை 8, உத்தமபாளையம் 6, வீரபாண்டி 10, வைகைஅணை 1, கொடைக்கானல் 6 மி.மீ மழையளவு பதிவாகியுள்ளது. இன்றும் வானம் மேகமூட்டத்துடன் காணப்படுவதால் மழைபெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Next Story