search icon
என் மலர்tooltip icon

    செய்திகள் (Tamil News)

    திருமண ஆசை காட்டி இளம்பெண் பலாத்காரம்: பெற்றோருடன் வாலிபர் கைது
    X

    திருமண ஆசை காட்டி இளம்பெண் பலாத்காரம்: பெற்றோருடன் வாலிபர் கைது

    ஆழ்வார்குறிச்சி அருகே காதலித்த பெண்ணை திருமண ஆசை காட்டி பலாத்காரம் செய்த வாலிபர் பெற்றோருடன் கைது செய்யப்பட்டார்.

    நெல்லை:

    ஆழ்வார்குறிச்சி அருகே உள்ள வாகைகுளத்தை சேர்ந்தவர் ஈஸ்வரன். இவரது மகன் பாலசுப்பிரமணியன். இவர் அதே பகுதியை சேர்ந்த ஒரு இளம்பெண்ணை 5 ஆண்டுகளாக காதலித்து வந்தார். மேலும் திருமணம் செய்வதாக கூறி அவரை கற்பழித்ததாகவும் தெரிகிறது. இந்த நிலையில் அந்த பெண் தன்னை திருமணம் செய்யுமாறு பாலசுப்பிரமணியனை வலியுறுத்தினார்.

    அதற்கு பாலசுப்பிரமணியன் மறுத்ததோடு காதலித்த பெண்ணை விட்டு விட்டு வேறு பெண்ணை திருமணம் செய்வதற்கு ஏற்பாடு செய்தாராம். இதற்கு பாலசுப்பிரமணியனின் பெற்றோர் ஈஸ்வரன், லட்சுமி ஆகியோர் உடந்தையாக இருந்தார்களாம்.

    இதுபற்றி பாதிக்கப்பட்ட பெண் அம்பை அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து பாலசுப்பிரமணியன், ஈஸ்வரன், லட்சுமி ஆகியோரை கைது செய்து விசாரித்து வருகிறார்கள்.

    Next Story
    ×