என் மலர்

  செய்திகள்

  தீக்குளிப்பு சம்பவங்களை ஒழிக்க திராவிட கொள்கையை அழிக்கவேண்டும்: எச்.ராஜா ஆவேசம்
  X

  தீக்குளிப்பு சம்பவங்களை ஒழிக்க திராவிட கொள்கையை அழிக்கவேண்டும்: எச்.ராஜா ஆவேசம்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  தீக்குளிப்பு சம்பவங்கள் அடியோடு ஒழிக்க வேண்டும் என்றால் திராவிட கொள்கையை அழிக்க வேண்டும் என பாரதிய ஜனதா தேசிய செயலாளர் எச்.ராஜா கூறினார்.
  கரூர்:

  பா.ஜ.க. மாநில செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் கரூரில் இன்று நடக்கிறது. இதில் பங்கேற்பதற்காக மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன், தேசிய செயலாளர் எச்.ராஜா உள்பட மாநில நிர்வாகிகள் பலர் கரூர் வந்தனர்.

  இந்தநிலையில் ஓட்டலில் தங்கி இருந்த தேசிய செயலாளர் எச்.ராஜாவிடம் நடிகர் விஷால் அலுவலகத்தில் வருமான வரி சோதனை குறித்து நிருபர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு அவர் கூறியதாவது:-

  நடிகர் விஷால் அலுவலகத்தில் நடந்த சோதனையில் எந்த உள்நோக்கமும் கிடையாது. அரசாங்க நிர்வாக அமைப்பின் துறை அதிகாரிகள் அவர்களது கடமையை செய்கிறார்கள். இதில் கட்சிக்கும், ஆட்சிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. உப்பு தின்றவர்கள் தண்ணி குடித்து தான் ஆகவேண்டும். வரி கட்டாதவர்கள் அதனை சந்தித்து தான் ஆக வேண்டும் என்றார்.

  தொடர்ந்து நெல்லையில் கந்து வட்டி கொடுமையால் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் தீக்குளித்த சம்பவம் குறித்து கூறும்போது, இது போன்ற தீக்குளிப்பு சம்பவம் தவறானவை. நம்பிக்கையை இழந்து யாரும் தீக்குளிப்பில் ஈடுபடாதீர்கள். இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் தமிழகத்தில் தான் தீக்குளிப்பு சம்பவங்கள் அதிகம் நடக்கிறது.

  தீக்குளிப்பு சம்பவங்கள் அடியோடு ஒழிக்க வேண்டும் என்றால் திராவிட கொள்கையை அழிக்க வேண்டும். இதுபோன்ற சம்பவங்கள் ஆன்மீகம் மீது நம்பிக்கை குறைந்து வருவதை காட்டுகிறது. பகுத்தறிவால் தமிழக மக்களின் அறிவை மழுங்கடித்து விட்டார்கள். ஆன்மீகமும், நம்பிக்கையும் இருந்தால் தான் துணிவு வரும். ஈ.வெ.ரா. ஆட்கள் பகுத்தறிவால் தமிழகத்தை குட்டிச் சுவராக்கிவிட்டனர். இந்த தீக்குளிப்பு சம்பவமும் ஒரு எடுத்துக்காட்டு. நாத்திகத்தை அடியோடு விரட்டியடிக்க வேண்டும் என ஆவேசத்துடன் கூறினார்.


  பா.ஜ.க. மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் நிருபர்களுக்கு பேட்டியளித்த போது, கந்து வட்டி கொடுமையை போக்கத்தான் மத்திய அரசு முத்ரா வங்கி திட்டத்தை செயல்படுத்தி உள்ளது. எந்தவித பிணையமும் இல்லாமல் 20 ஆயிரம் முதல் ரூ.20 லட்சம் வரை கடன் வழங்கப்படுகிறது. தமிழகத்தில் 53 லட்சம் பேர் முத்ரா வங்கி திட்டத்தில் பயன்பெற்றுள்ளனர். தீக்குளிப்பு சம்பவத்தில் யாரும் ஈடுபடாதீர்கள். மத்திய அரசின் நல்ல திட்டங்களை பயன்படுத்தி கொள்ளுங்கள் என்றார்.

  தொடர்ந்து அவர் கூறுகையில், நாகரீகமான முறையில் கருத்து சொன்னதற்கு திருமாவளவன் தரப்பு ஆட்கள் எனக்கு செல்போன் மூலம் மிரட்டல் விடுத்து வருகின்றனர். இதைபற்றி நான் கவலைப்பட போவதில்லை. எனது உருவபொம்மையை எரித்து வன்முறையை கையாளுவதை கைவிட்டு பதில் சொல்லட்டும். ‘மெர்சல்’ படத்தில் மத்திய அரசு திட்டத்தின் கருத்து திரித்துக் கூறப்பட்டது. அரசின் கருத்தை திரித்து கூறாதீர்கள் என்று எடுத்துரைத்தோம். இதில் வேறொன்றும் இல்லை’ என்றார்.
  Next Story
  ×