என் மலர்
செய்திகள்

அந்தியூரில் பெண்ணை மானபங்கப்படுத்த முயற்சி-கொலை மிரட்டல்: தொழிலாளி கைது
பெண்ணை மானபங்கப்படுத்த முயற்சி செய்து கொலை மிரட்டல் விடுத்த தொழிலாளியை போலீசார் கைது செய்தனர்.
அந்தியூர்:
அந்தியூர் எம்.ஜி.ஆர். வீதியை சேர்ந்தவர் துரையன் என்கிற அலாவுதீன் (வயது 55). தொழிலாளி. இவர் அந்த பகுதியில் உள்ள உறவினர் ஒருவரின் வீட்டுக்கு சாப்பாடு வாங்க சென்றார். அங்கு வீட்டு முன் பகுதியில் அந்த உறவினரின் 24 வயது மகள் நின்றார்.
வீட்டுக்குள் அந்த இளம் பெண்ணின் தாயார் இருந்தார். அவரிடம் அலாவுதீன் சாப்பாடு கேட்டார். இதைத் தொடர்ந்து அந்த இளம் பெண்ணின் தாயார் சாப்பாடு எடுக்க வீட்டுக்குள் சென்றார்.
அந்த நேரத்தில் அந்த இளம்பெண்ணை அலாவுதீன் மானபங்கப்படுத்த முயற்சித்து கொலை மிரட்டல் விடுத்தார். இது குறித்து அந்தியூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கஜலட்சுமி வழக்குப்பதிவு செய்து அலாவுதீனை கைது செய்தார்.
பவானி கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட அலாவுதீன் பின்னர் பவானி ஜெயிலில் அடைக்கப்பட்டார்.
Next Story






