என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்

X
தடையை மீறி போராடிய ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் 15-ந்தேதி ஆஜராக வேண்டும்: மதுரை ஐகோர்ட்டு உத்தரவு
By
மாலை மலர்12 Sep 2017 6:20 AM GMT (Updated: 12 Sep 2017 6:20 AM GMT)

தடையை மீறி போராட்டம் நடத்திய ஜாக்டோ-ஜியோ அமைப்பை சேர்ந்த ஒருங்கிணைப்பாளர்கள், பொறுப்பாளர்கள் மற்றும் நிர்வாகிகள் வருகிற 15-ந்தேதி ஆஜராக வேண்டும் என மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.
மதுரை:
மதுரையை சேர்ந்த சேகரன் மதுரை ஐகோர்ட்டில் பொதுநல மனுதாக்கல் செய்தார். அதில், அரசு ஊழியர்களுக்கு ஏற்கனவே போதுமான அளவு ஊதியம் அரசு வழங்கி வருகிறது. அரசின் மொத்த வருவாயையும் சம்பளம் வழங்குவதற்கு மட்டும் பயன்படுத்த முடியாது.
வேலை நிறுத்தம் அடிப்படை உரிமை அல்ல. மேலும் வேலை நிறுத்தம் செய்வது அரசு ஊழியர்களின் நன்னடத்தை விதிகளுக்கு எதிரானது.
வேலை நிறுத்தத்தை அனுமதித்தால் அரசு பள்ளிகளில் 10, 11, 12 பயிலும் மாணவர்களின் எதிர்காலம் பாதிப்புக்குள்ளாகும். பொதுமக்களும் பாதிக்கப்படுவார்கள்.
அரசு அலுவலகங்களில் பணிகள் பாதிக்கப்படும். எனவே அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்துக்கு தடை விதிக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த மனு ஏற்கனவே விசாரணைக்கு வந்தபோது அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர் கூட்டமைப்பின் காலவரம் பற்ற வேலை நிறுத்தத்திற்கு இடைக்கால தடை விதித்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
இருப்பினும் தடையை மீறி ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் மாநிலம் முழுவதும் போராட்டம் நடத்தினர். இதனை மனு தாரர் ஐகோர்ட்டின் கவனத்துக்கு கொண்டு சென்றார்.
அப்போது நீதிமன்ற உத்தரவை மீறி போராட்டத்தில் ஈடுபடுபவர்கள் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க வழக்கு தொடர நீதிபதிகள் அனுமதி அளித்து உத்தரவிட்டனர்.
இந்த வழக்கு இன்றும் நீதிபதிகள் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. தடையை மீறி போராட்டம் நடத்திய ஜாக்டோ-ஜியோ அமைப்பை சேர்ந்த ஒருங்கிணைப்பாளர்கள், பொறுப்பாளர்கள் மற்றும் நிர்வாகிகள் வருகிற 15-ந்தேதி மதுரை ஐகோர்ட்டில் ஆஜராக வேண்டும். மேலும் இது தொடர்பாக போலீசார் நீதிமன்ற நோட்டீசை அவர்களுக்கு வழங்க வேண்டும் என கூறி வழக்கை வருகிற 15-ந்தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

Next Story
×