என் மலர்
செய்திகள்

காரியாபட்டியில் கணவருடன் சென்ற பெண்ணிடம் நகை பறிப்பு
விருதுநகர்:
மதுரை பழங்காநத்தத்தைச் சேர்ந்தவர் பழனியாண்டி. இவரது மனைவி முத்துச்செல்வி. இவர்கள், காரியாபட்டி மருதங்குடியில் நடைபெற்ற உறவினர் இல்ல நிகழ்ச்சிக்கு சென்றனர்.
பின்னர் அங்கிருந்து மோட்டார் சைக்கிளில் ஊருக்கு புறப்பட்டனர். மதுரை-காரியாபட்டி 4 வழிச்சாலையில் வந்தபோது பின்னால் 2 வாலிபர்கள் மோட்டார் சைக்கிளில் வந்தனர். அவர்கள் பழனியாண்டி மோட்டார் சைக்கிள் அருகே வந்தபோது முத்துச்செல்வி கழுத்தில் கிடந்த 9 பவுன் தங்கச்சங்கிலியை ஒருவன் பறிக்க முயன்றான்.
ஆனால் நகையை பிடித்துக் கொண்டு முத்துச் செல்வி போராடினார். இதில் அவரது கையில் 2 பவுன் மட்டுமே சிக்கியது. 7 பவுன் நகையுடன் மோட்டார் சைக்கிள் கொள்ளையர்கள் தப்பிச் சென்று விட்டனர்.
இந்த சம்பவம் காரியாபட்டி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. இது குறித்து போலீசில் புகார் செய்யப்பட்டது. காரியாபட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து நகையை பறித்துச் சென்ற வாலிபர்களை தேடி வருகின்றனர்.