என் மலர்tooltip icon

    செய்திகள்

    புதுக்கோட்டை அருகே சொத்து தகராறில் வாலிபர் வெட்டிக்கொலை: அண்ணன் வெறிச்செயல்
    X

    புதுக்கோட்டை அருகே சொத்து தகராறில் வாலிபர் வெட்டிக்கொலை: அண்ணன் வெறிச்செயல்

    புதுக்கோட்டை அருகே சொத்து தகராறில் தம்பியை அண்ணன் வெட்டிக் கொன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    கீரனூர்:

    புதுக்கோட்டை மாவட்டம்  கீரனூர் அருகே உள்ள மலையடிப்பட்டியை சேர்ந்தவர்  காசிலிங்கம். இவரது மகன்கள் குமார் (வயது 37), திருமுருகன் (33).

    இந்நிலையில் அண்ணன் தம்பி இடையே சொத்து தகராறு இருந்து வந்தது. இதனால் அடிக்கடி  மோதலும் ஏற்பட்டு வந்தது. சமீபத்தில் சொத்து ஒன்றை விற்றதில் அதற்கான பங்கு தொகையை திருமுருகனுக்கு  குமார் கொடுக்கவில்லை என கூறப்படுகிறது.

    இதையடுத்து திருமுருகன் ,  குமாரிடம் தட்டி கேட்கவே இருவருக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. மோதல் உண்டான நிலையிலும் அண்ணன் - தம்பி  இருவரும் ஒரே வீட்டில் வசித்து வந்தனர். நேற்று நள்ளிரவு  திருமுருகன்  அயர்ந்து தூங்கி கொண்டிருந்த போது, ஆத்திரமடைந்த  குமார் அரிவாளால் திருமுருகனை சரமாரி வெட்டி விட்டு தப்பியோடிவிட்டார். இதில் ரத்தவெள்ளத்தில் திருமுருகன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

    இது குறித்த தகவல் அறிந்ததும் கீரனூர் போலீஸ் டி.எஸ்.பி. பாலகுரு மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டனர். பின்னர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக புதுக்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் தப்பியோடிய  குமாரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

    சொத்து தகராறில் தம்பியை அண்ணன் வெட்டிக் கொன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    Next Story
    ×