என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்

X
தமிழகத்தில் முதன்முதலாக ‘ஜிகா’ வைரஸ் காய்ச்சல் தாக்கிய வாலிபர் குணம் அடைந்தார்
By
மாலை மலர்11 July 2017 6:03 AM GMT (Updated: 11 July 2017 6:03 AM GMT)

தமிழகத்தில் முதன்முதலாக ‘ஜிகா’ வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட வாலிபர் குணம் அடைந்தார் என்று கிருஷ்ணகிரி மாவட்ட சுகாதாரத்துறை துணை இயக்குனர் பிரியாராஜ் கூறினார்.
சென்னை:
வெளிநாடுகளை அச்சுறுத்திய ‘ஜிகா’ வைரஸ் இந்தியாவில் குஜராத் மாநிலத்தில் கடந்த ஆண்டு புகுந்தது.
அங்கு 3 பேருக்கு ஜிகா வைரஸ் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. 34 வயது பெண் ஒருவருக்கும், 22 வயது கர்ப்பிணி பெண்ணுக்கும் 64 வயதான ஒருவருக்கும் இந்த வைரஸ் இருந்தது தெரிய வந்தது.
இந்த நிலையில் தமிழகத்திலும் ஜிகா வைரஸ் தற்போது தலைதூக்கியுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம் நாட்றாம்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த 27 வயது வாலிபருக்கு ‘ஜிகா’ வைரஸ் இருப்பது பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது. அஞ்செட்டி ஆரம்ப சுகாதார நிலையத்தில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டதை தொடர்ந்து அவர் குணமாகி விட்டார்.
ஜிகா வைரஸ் முதன் முதலாக தமிழகத்தில் பரவியுள்ளதையடுத்து சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், பொது சுகாதாரத்துறை இயக்குனர் டாக்டர் குழந்தைசாமி மற்றும் அதிகாரிகள் அங்கு முகாமிட்டு முன் எச்சரிக்கை தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
ஜிகா வைரஸ் பாதிப்பு குறித்து கிருஷ்ணகிரி மாவட்ட சுகாதாரத்துறை துணை இயக்குனர் பிரியாராஜ் கூறியதாவது:-
நாட்றாம்பாளையம் வாலிபருக்கு தொடர்ந்து காய்ச்சல் இருந்து வந்தது. இதையடுத்து அவரை பரிசோதனை செய்த போது டெங்கு, வைரஸ், சிக்குன் குனியா போன்ற காய்ச்சல்கள் இல்லை என்று தெரிய வந்தது.
இருந்த போதிலும் அவருக்கு தொடர்ந்து காய்ச்சல் இருந்ததால் ரத்த மாதிரி, சிறுநீர் ஆகியவை புனேவில் உள்ள ஆய்வகத்திற்கு பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. இதில் அந்த வாலிபருக்கு ஜிகா வைரஸ் காய்ச்சல் இருந்தது தெரிய வந்தது. இதையடுத்து அந்த வாலிபருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. தற்போது அவர் குணமாகி வருகிறார்.
மேலும் அதே கிராமத்தில் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 4 பேரின் ரத்த மாதிரிகள் ஆய்விற்காக புனேவுக்கு அனுப்பப்பட்டது. அதில் யாருக்கும் ஜிகா வைரஸ் பாதிப்பு இல்லை என தெரிய வந்தது.
தற்போது நாட்றாம்பாளையம் கிராமத்தை சுற்றி உள்ள கிராமங்களில் 8 மருத்துவ குழுக்கள் முகாமிட்டு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் அங்கு மருத்துவ முகாம்கள் அமைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றன.
இவ்வாறு அவர் கூறினார்.
பொது சுகாதாரத்துறை இயக்குனர் டாக்டர் குழந்தை சாமி கூறியதாவது:-
காய்ச்சல், கண்கள் சிவப்பு நிறமாக மாற்றம், சோர்வு, மூட்டு வலி, தலைவலி உள்ளிட்ட அறிகுறிகள் நாட்றாம் பாளையத்தில் உள்ள 27 வயது வாலிபருக்கு காணப்பட்டன. இதனையடுத்து அவரின் சிறுநீர் மற்றும் ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு மணிப்பால் வரஸ் ஆராய்ச்சி மையத்திற்கு அனுப்பப்பட்டது.
அங்கு அவரது சிறுநீர் மற்றும் ரத்த மாதிரிகளை சோதித்துவிட்டு ஜிகா வைரஸ் பாதிப்பு இல்லை என்று முடிவு அறிவித்தனர்.
இதனைத்தொடர்ந்து சிறுநீர் மற்றும் ரத்த மாதிரிகள் புனேயில் உள்ள தேசிய வைரஸ் ஆய்வு மைய நிறுவனத்திற்கு அனுப்பப்பட்டன. அங்கு பரிசோதனையில் ஜிகா வைரஸ் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது. அந்த வாலிபருக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டது. ஜிகா வைரஸ் நோயால் பாதிக்கப்பட்ட வாலிபர் பெங்களூரு மற்றும் ஆந்திரா மாநிலத்திற்கு 3 மாதங்களுக்கு முன்பு பயணம் மேற்கொண்டுள்ளார். எனவே அவருக்கு ஜிகா வைரஸ் எப்படி பரவியது என்பது குறித்து கண்டறியும் முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
ஜிகா வைரஸ் பாதிப்பு ஏற்படுவது எப்படி? என்பது குறித்து டாக்டர் ஒருவர் கூறியதாவது:-
ஜிகா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டால் காய்ச்சல் உருவாகும், தோலில் அரிப்பு ஏற்படும், கண் நோய் உருவாகும். அதாவது கண்கள் ரத்த சிவப்பு நிறத்தில் தோன்றும். மூட்டுகளில் வலி ஏற்படும், உடல் சோர்வு ஏற்படும்.
இதுபோன்ற அறிகுறிகள் ஏற்பட்டால் உடனடியாக அரசு ஆஸ்பத்திரிகளுக்கு சென்று சிகிச்சை பெறுவது அவசியம். சிறுநீர் மற்றும் ரத்த மாதிரிகளை சேகரித்து பரிசோதனை செய்ய வேண்டும்.
இந்த வைரஸ் பாதிப்பு ஏற்பட கொசுக்கள் தான் காரணம். ஏடீஸ் கொசுக்கள் கடித்த 2 நாட்கள் முதல் 7 நாட்களில் மேற்கண்ட இந்த அறிகுறிகள் தோன்றும். இந்த அறிகுறிகள் டெங்கு காய்ச்சல் போல் இல்லாமல் சாதாரணமாக இருப்பதால் பலருக்கு இதுபற்றி தெரிவதில்லை. எனவே உஷாராக இருப்பது நல்லது.
இவ்வாறு அவர் கூறினார்.
ஈரோடு மாவட்டம் அம்மாபேட்டை அருகே சித்தார் பகுதியில் என்ஜினீயரிங் மாணவர் தினேஷ் குமார், அத்தாணியில் 3-ம் வகுப்பு மாணவி மைனுகா (வயது 8), கவுந்தப்பாடி அருகே 1-ம் வகுப்பு மாணவர் தர்ஷன், சித்தோடு ரோஜா நகரை சேர்ந்த தீபிகா (9), பவானி திருவள்ளுவர் நகரை சேர்ந்த பிளஸ்-2 மாணவி பிரியதர்சினி (17) ஆகியோர் மர்ம காய்ச்சலுக்கு பலியாகி உள்ளனர்.
பவானி திருவள்ளுவர் நகரை சேர்ந்த சண்முகம் என்பவரது மகள் பிரியதர்சினி (வயது 17) மர்ம காய்ச்சலால் கடுமையாக பாதிக்கப்பட்டு கோவையில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.
ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி பிரியதர்சினி நேற்று மாலை பரிதாபமாக இறந்தார்.
இதேபோல் கோபி பகுதியை சேர்ந்த வேதகி (வயது 24) என்ற இளம்பெண்ணும் மர்ம காய்ச்சலுக்கு பலியானார்.
தற்போது கேரள மாநிலத்தில் டெங்குவின் தாக்கம் அதிகமாக இருப்பதால் கேரளாவை ஒட்டி உள்ள கோவை மற்றும் ஈரோடு மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகமாக உள்ளது.
ஈரோடு மாவட்டத்தில் மட்டும் டெங்கு காய்ச்சலால் 50-க்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டு தனியார் மற்றும் அரசு ஆஸ்பத்திரிகளில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
இப்போது டெங்கு காய்ச்சலுடன் ஜிகா வைரசும் ஈரோடு மாவட்ட மக்களை பயமுறுத்தி வருகிறது.
சுகாதாரத்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், ஜிகா வைரசை பரப்பும் கொசு இங்கு கிடையாது. இது வெளிநாட்டு கொசு வகையை சேர்ந்தது. வெளிநாட்டில் இருந்து நம் நாட்டுக்கு வரும் வெளிநாட்டவருக்கு இந்த ஜிகா வைரஸ் இருந்தால் அவர்கள் மூலம் நம் நாட்டில் பரவக்கூடும்.
இதனால்தான் நம் நாட்டில் உள்ள விமான நிலையங்களில் தீவிர சோதனை நடத்தப்பட்டு வருகிறது. ஈரோடு மாவட்டத்தில் ஜிகா வைரஸ் பாதிக்கப்பட்டவர்கள் எவரும் இல்லை.
அந்த வைரஸ் நோய் பரவும் வாய்ப்பும் இல்லை. எனினும் பரவாமல் தடுக்க தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறோம் என்றார்.

Next Story
×