என் மலர்

    செய்திகள்

    பரமத்திவேலூர் அருகே மது விற்றவர் கைது
    X

    பரமத்திவேலூர் அருகே மது விற்றவர் கைது

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    பரமத்திவேலூர் அருகே காட்டுப்பகுதியில் திருட்டுத்தனமாக மது விற்றவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்த 5 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

    வேலாயுதம்பாளையம்:

    கரூர் மாவட்டம், பரமத்தி வேலூர்-கரூர் சாலையில் அய்யம்பாளையம் கோரைக் காட்டு பகுதியில் நேற்று காலை திருட்டுத்தனமாக மது பாட்டில்கள் விற்பனை செய்து வருவதாக வேலாயுதம் பாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    தகவலின் பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வேணு கோபால் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்த்த போது அங்கு மது பாட்டில்களை வைத்து விற்பனை செய்து கொண்டிருப்பது தெரிய வந்தது.

    பின்னர் சுற்றி வளைத்து போலீசார் பிடித்து விசாரித்ததில் அய்யம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் செல்வராஜ் (வயது46) என்பது தெரியவந்தது. அவரை போலீசார் கைது செய்து அங்கு விற்பனைக்கு வைத்திருந்த 5 மது பாட்டில்களை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×