என் மலர்

    செய்திகள்

    நாமக்கல் அருகே விபத்தில் காயம் அடைந்த விவசாயி பலி
    X

    நாமக்கல் அருகே விபத்தில் காயம் அடைந்த விவசாயி பலி

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    நாமக்கல் அருகே விபத்தில் காயம் அடைந்த விவசாயி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து மோகனூர் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் இளங்கோவன் விசாரணை நடத்தி வருகிறார்.
    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் மோகனூர் அருகே உள்ள கணபதி பாளையம் பகுதியை சேர்ந்தவர் நடேசன் (வயது 55). விவசாயி. இவரது மனைவி கோமதி(47).

    இவர்கள் 2 பேரும் கடந்த 28-ந்தேதி மொபட்டில் நாமக்கல் சாலையில் தீர்த்தப்பட்டி பிரிவு அருகே சென்று கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த கார் எதிர்பாராதவிதமாக திடீரென மொபட்டின் பின் பகுதியில் மோதியது. இதில் கோமதியும், நடேசனும் பலத்த காயம் அடைந்தனர்.

    பின்னர் சேலத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கோமதி அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

    இதற்கிடையே கோவையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் உயிருக்கு ஆபத்ததான நிலையில் சிகிச்சை பெற்று வந்த அவரது கணவர் நடேசன் உடல் நிலை மேலும் மோசம் அடைந்தது.

    இதனை தொடர்ந்து அவரை நாமக்கல் அரசு மருத்துவமனையில் சேர்க்கும்படி டாக்டர்கள் கூறினர். இதையடுத்து நாமக்கல் அரசு மருத்துவமனையில் நடேசன் சேர்க்கப்பட்டார். அங்கு அவர் இன்று காலையில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

    இது குறித்து மோகனூர் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் இளங்கோவன் விசாரணை நடத்தி வருகிறார்.
    Next Story
    ×