என் மலர்tooltip icon

    செய்திகள்

    நெய்வேலி அருகே வாலிபரை தாக்கி கொலை மிரட்டல்: 2 பேருக்கு வலை வீச்சு
    X

    நெய்வேலி அருகே வாலிபரை தாக்கி கொலை மிரட்டல்: 2 பேருக்கு வலை வீச்சு

    நெய்வேலி அருகே உள்ள பெரிய பாப்பன்குளம் பகுதியைச் சேர்ந்த வாலிபரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தது தொடர்பாக 2 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.
    நெய்வேலி:

    நெய்வேலி அருகே உள்ளது பெரிய பாப்பன்குளம். இந்த பகுதியை சேர்ந்தவர் வெங்கடேசன். இவரது வீட்டின் அருகே வசிப்பவர் உக்கிரவேல்.

    நேற்று இவர்கள் 2 பேருக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டது.

    அப்போது வெங்கடேசன் ஆபாசமாக உக்கிரவேலை பேசினார். இதை அறிந்த உக்கிரவேலுவின் நண்பர்கள் பாண்டியன், தர்மராஜ் ஆகியோர் வெங்கடேசன் வீட்டுக்கு சென்றனர்.

    எப்படி திட்டலாம் என்று கூறி வெங்கடேசனை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர்.

    தாக்குதலில் காயமடைந்த வெங்கடேசன் விருத்தாசலம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் குறித்து ஊ.மங்கலம் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குபதிவு செய்து பாண்டியன், தர்மராஜை தேடி வருகின்றனர்.
    Next Story
    ×