என் மலர்
உள்ளூர் செய்திகள்

மாணவருடன் ஓட்டம் பிடித்த 14 வயது சிறுமி- பெற்றோர் போலீசில் புகார்
- 2 பேரும் அடிக்கடி நேரில் சந்தித்தும் செல்போனில் பேசியும் தங்களது காதலை வளர்த்து வந்தனர்.
- புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பிளஸ்-1 மாணவருடன் ஓட்டம் பிடித்த 14 வயது சிறுமியை தேடி வருகிறார்கள்.
கோவை:
கோவை அருகே உள்ள கோவில் பாளையத்தை சேர்ந்த 15 வயது சிறுவன். இவர் அந்த பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்தார்.
மாணவருக்கு அதே பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்த 14 வயது சிறுமியுடன் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் இது காதலாக மாறியது. 2 பேரும் அடிக்கடி நேரில் சந்தித்தும் செல்போனில் பேசியும் தங்களது காதலை வளர்த்து வந்தனர்.
இந்த காதல் விவகாரம் 2 பேரின் பெற்றோருக்கு தெரிய வரவே அவர்கள் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து தங்களது மகன், மகளுக்கு அறிவுரை வழங்கினார்.
சம்பவத்தன்று 2 பேரும் வழக்கம் போல தங்களது பெற்றோரிடம் பள்ளிக்கு செல்வதாக கூறிவிட்டு சென்றனர். ஆனால் அவர்கள் பள்ளிக்கு செல்லாமல் ஓட்டம் பிடித்தனர்.
நீண்ட நேரம் ஆகியும் பள்ளிக்கு சென்ற தங்களது மகன், மகள் வீட்டிற்கு திரும்பாததால் சந்தேகம் அடைந்த பெற்றோர் அவர்களை அக்கம் பக்கத்தில் தேடினர். அப்போது 2 பேரும் பள்ளிக்கு செல்லாமல் வீட்டை விட்டு ஓட்டம் பிடித்தது தெரிய வந்தது.
இது குறித்து 2 பேருடைய பெற்றோரும் மாயமான தங்களது மகன், மகள் ஆகியோரை கண்டுபிடித்து தரும்படி கோவில்பாளையம் போலீசில் புகார் செய்தனர்.
புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பிளஸ்-1 மாணவருடன் ஓட்டம் பிடித்த 14 வயது சிறுமியை தேடி வருகிறார்கள்.






