என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  கோவையில் மூதாட்டி உள்பட 2 பேரிடம் 10¾ பவுன் செயின் பறிப்பு
  X

  கோவையில் மூதாட்டி உள்பட 2 பேரிடம் 10¾ பவுன் செயின் பறிப்பு

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • விளையாட்டு பயிற்சி மையத்துக்கு ெமாபட்டில் அழைத்து சென்றார்.
  • 8¼ பவுன் தங்க செயினை பறித்து தப்பிச் சென்றனர்.

  கோவை

  கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள பல்லடம் ரோட்டை சேர்ந்தவர் ராமகிருஷ்ணன். இவரது மனைவி லாவண்யா (வயது 38).

  சம்பவத்தன்று இவர் தனது மகனை அந்த பகுதியில் உள்ள விளையாட்டு பயிற்சி மையத்துக்கு ெமாபட்டில் அழைத்து சென்றார். பின்னர் வீட்டிற்கு திரும்பும் வழியில் கதிரவன் நகரில் உள்ள ரோட்டோர பூக்கடையில் பூ வாங்கி விட்டு மொபட்டை எடுப்பதற்காக வந்தார்.

  அப்போது அங்கு மோட்டார் சைக்கிளில் நின்று கொண்டு இருந்த 2 வாலிபர்கள் கண்இமைக்கும் நேரத்தில் லாவண்யா கழுத்தில் அணிந்து இருந்த 8¼ பவுன் தங்க செயினை பறித்து தப்பிச் சென்றனர். இது குறித்து லாவண்யா மகாலிங்கபுரம் போலீசில் புகார் செய்தார்.

  புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பெண்ணிடம் செயினை பறித்து சென்ற வாலிபர்களை தேடி வருகிறார்கள்.

  இடிகரை அருகே உள்ள கோவிந்த நாயக்கன் பாளையத்தை சேர்ந்தவர் ராமமூர்த்தி. இவரது மனைவி நிர்மலா (60). சம்பவத்தன்று இவர் தனது சகோதரி வீட்டிற்கு செல்வதற்காக நரசிம்ம நாயக்கன் பாளையம் பஸ் நிறுத்தத்தில் நின்று கொண்டு இருந்தார். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த 2 வாலிபர்கள் கண்இமைக்கும் நேரத்தில் நிர்மலா கழுத்தில் அணிந்து இருந்த 2½ பவுன் தங்க செயினை பறித்து தப்பிச் சென்றனர்.

  இது குறித்து அவர் பெரிய நாயக்கன் பாளையம் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில போலீசார் வழக்குப்பதிவு செய்து மூதாட்டியிடம் செயினை பறித்து சென்ற வாலிபர்களை தேடி வருகிறார்கள்.

  Next Story
  ×