என் மலர்
செய்திகள்

சட்டசபையில் பட்ஜெட் சடங்கு போல் ஆகிவிட்டது- பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
ஆலந்தூர்:
தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்தின் மனைவி பிரேமலதா சென்னை விமான நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-
மகளிர் தினத்தை உலக அளவில் கொண்டாடும் இந்த நேரத்தில் பெண்களுக்கு விரோதமான காரியங்கள் தினம் தினம் நடந்து வருகின்றன.
துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பெண்ணுக்கு எதிரான தாக்குதல் கண்டனத்துக்குரியது என்று கூறுகிறார். இதை எதிர்க்கட்சிகள் சொன்னால் கூட பரவாயில்லை.

பெண்களை பாதுகாக்க வேண்டிய அரசாங்கம், பாதுகாக்கிறவர்களே சொல்கிறார்கள். இது வேடிக்கையாக உள்ளது.
மாணவி அஸ்வினியை குத்தி கொலை செய்தவன், கர்ப்பிணி பெண் மரணத்துக்கு காரணமாக இருந்த போலீஸ் இன்ஸ் பெக்டர் காமராஜுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும். இனிமேல் இதுபோன்ற சம்பவம் நடைபெறக் கூடாது.
பட்ஜெட் என்பது ஒருநாள் நிகழ்ச்சி போல் ஆகிவிட்டது. இதற்கு முன்பு போடப்பட்ட பட்ஜெட்டுகளால் நாட்டுக்கும், மக்களுக்கும் பிரயோ ஜனம் இல்லை.
இதற்கு முன்பு போட்ட பட்ஜெட்டை நிறைவேற்றினால் தமிழ்நாடு ஏன் பின்னோக்கி இருக்கிறது. பட்ஜெட், சட்டசபை கூட்டம், காவிரி மேலாண்மை வாரியம் எல்லாம் சடங்குபோல் ஆகிவிட்டது.
காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்காக அனைத்து கட்சி கூட்டம் நடைபெற்றது. இதனை நாங்கள் வரவேற்கிறோம். இது கர்நாடகாவில் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. காவிரி மேலாண்மை வாரியம் கண்டிப்பாக அமைக்கப்பட வேண்டும். இதுபற்றி முதல்- அமைச்சர் கூட சொல்லி இருக்கிறார். இது வெறும் வாய்வார்த்தையாக இல்லாமல் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ரஜினி, எம்.ஜி.ஆர். ஆட்சி தருவேன் என்று கூறி உள்ளார். அதை அ.தி.மு.க.வினரே எதிர்த்து உள்ளனர். ரஜினி அறிக்கையாக மட்டும் பேசாமல் அதன்படி நிற்க வேண்டும்.
தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் கருப்பு எம்.ஜி.ஆர். என்று மக்களால் அழைக்கப்பட்டவர்.

நீதிமன்ற தீர்ப்புக்கு பின் உள்ளாட்சி தேர்தல் நடத்தப் படும் என்று ஓ.பன்னீர் செல்வம் சொல்லி இருக்கிறார். அடுத்து வரப்போவது சட்டசபை தேர்தல்தான். சட்டசபை தேர்தலோ, உள்ளாட்சி தேர்தலோ அதனை சந்திக்க தே.மு.தி.க. தயாராக உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார். #tamilnews #PremalathaVijayakanth #dmdk #tnassembly






