என் மலர்
அழகுக் குறிப்புகள்
- தரமான கூந்தல் பராமரிப்பு பொருட்களை பயன்படுத்துங்கள்.
- சுருள் தலைமுடிக்கு பிரஷ் உபயோகிப்பதைத் தவிர்க்கவும்.
அசைந்தாடும் அழகான சுருள் முடியை தற்போது பல இளம் பெண்கள் விரும்புகிறார்கள். இதற்காக அழகு நிலையங்களில் பல மணி நேரம் செலவிடுவார்கள். தலைமுடியை இவ்வாறு அலங்கரிப்பதற்கு ஸ்ட்ரெயிட்னர், கேர்லர் போன்ற மின் சாதனங்கள் பயன்படுத்தப்படுகிறது.இவற்றை அடிக்கடி உபயோகிப்பதால் தலைமுடி வலுவிழக்கும். இவற்றை தவிர்த்து வீட்டிலேயே எளிமையான முறையில் சுருள் முடி அலங்காரம் செய்வதற்கான குறிப்புகள் இங்கே...
சுருள் முடி பராமரிப்பு: தரமான கூந்தல் பராமரிப்பு பொருட்களை பயன்படுத்துங்கள். பருத்தி துணிக்கு மாற்றாக, சாட்டின் துணியால் தயாரிக்கப்பட்ட தலையணை உறைகளைப் பயன்படுத்துங்கள். இதனால் கூந்தல் அதிக அழுத்தத்துக்கு உட்பட்டு உடைவதைத் தடுக்க முடியும். தலைமுடி வறட்சியடையாமல் பார்த்துக்கொள்ளுங்கள். சுருள் தலைமுடிக்கு பிரஷ் உபயோகிப்பதைத் தவிர்க்கவும். பெரிய பற்கள் கொண்ட சீப்பு அல்லது கை விரல்களால் நிதானமாக சிக்கு எடுக்கவும். மரத்தால் ஆன சீப்பு பயன்படுத்துவது நல்லது.
கூந்தல் சீரம் என்றால் என்ன?
கூந்தல் சீரம் என்பது 'சிலிக்கான்' என்ற பொருளைப் பயன்படுத்தி தயாரிக்கப்படும் திரவமாகும். இது முடியின் மீது ஒரு பாதுகாப்பு அடுக்கை உருவாக்கி, கூந்தலை சிக்கு இல்லாமல் ஈரப்பதத்துடன் மென்மையாக வைத்திருக்க உதவும். இதற்கு முதலில் தலைக்கு குளித்து, கூந்தலை நன்றாக உலரவைத்து சிக்கு இல்லாமல் வாரிக் கொள்ள வேண்டும்.
செய்முறை - 1 கூந்தலில் சீரம் தடவி சற்று ஈரப்பதமாக இருக்குமாறு செய்யுங்கள். பின்பு கூந்தலை 4 பகுதிகளாகப் பிரியுங்கள். பின்னர் ஒவ்வொன்றையும் மேலும் சிறு பகுதிகளாகப் பிரித்து, மெல்லிய சடைகளாகப் பின்னி விடுங்கள். அப்படியே இரவு முழுவதும் விட்டு விடுங்கள். அடுத்த நாள் இதனை ஒவ்வொன்றாக பிரித்து விட்டால், லேசான சுருள்கள் பார்க்க அழகாக இருக்கும்.
செய்முறை - 2 தலையில் பெரிய 'ஹெட் பாண்ட்' போட்டுக் கொள்ளுங்கள். பிறகு சிறு சிறு பகுதியாக கூந்தலைப் பிரித்து, ஒவ்வொரு பகுதியையும் தனித்தனியாக சுருட்டுங்கள். அவை கலைந்துவிடாதவாறு ஹேர் பின் கொண்டு பொருத்துங்கள். இந்த நிலையில் தலைமுடி சற்று ஈரப்பதமுடன் இருப்பதற்காக கூந்தல் ஸ்பிரே பயன்படுத்தலாம். மறுநாள் காலையில் ஹேர்பின்களை நீக்கிவிட்டு, லேசாக முடியை பிரஷ் செய்யுங்கள்.
செய்முறை - 3 நீளமான கூந்தலில் சுருள் அலங்காரம் செய்வதற்கு 'ரெடிமேட் கர்லிங் ஸ்டிக்'குகளை உபயோகிக்கலாம். தலைமுடியை சிறு சிறு பகுதிகளாகப் பிரித்து, அவற்றை கர்லிங் ஸ்டிக் வைத்து சுருட்டி வைக்கவும். இவற்றை இரவு முழுவதும் அப்படியே விட்டுவிடலாம். மறுநாள் காலை தலைமுடியை பிரித்து விட்டு பெரிய பற்கள் கொண்ட சீப்பினால் வாரிவிடவும்.
குறிப்பு: இவ்வாறு அலங்காரம் செய்யும்போது கூந்தலில் எண்ணெய் பூசக்கூடாது. தலையில் ஹேர் சீரம் தடவிக் கொண்டால், சுருள்கள் நீண்ட நேரம் இருக்கும். இவ்வாறு அலங்கரித்த சுருள் அமைப்பு 3 முதல் 4 மணி நேரம் வரை நீடிக்கும்.
- சிலருக்கு நெற்றியில் மட்டும் தழும்புகளும், நிற மாற்றமும் காணப்படுவதுண்டு.
- இதை ஃபோர்ஹெட் டேனிங் என்று கூறுவார்கள்.
சிலருக்கு உடலின் சில பாகங்களில் மட்டும் அல்லது முகத்தில் சில இடங்களில் மட்டும் நிறம் மாறுவதுண்டு. இது பார்ப்பதற்கு வித்தியாசமாக இருப்பதோடு முகப்பொலிவையும் கெடுத்து விடுகிறது. மேலும், பல இடங்களுக்கு செல்ல வேண்டிய சூழ்நிலை ஏற்படும்போது இது நமது தன்னம்பிக்கையையும் கெடுத்து விடுகிறது. முகத்தில் இப்படி நிறம் மாறும் பாகங்களில் நெற்றியும் ஒன்றாகும்.
பல சமயங்களில் நமது கன்னங்களும் முகத்தின் பிற பாகங்களும் பொலிவாக இருக்க, நெற்றியில் மட்டும் தழும்புகளும், நிற மாற்றமும் காணப்படுவதுண்டு. இதை ஃபோர்ஹெட் டேனிங் என்று கூறுவார்கள். டேனிங் காரணமாக, முகம் மற்றும் நெற்றியின் நிறம் வித்தியாசமாக தெரிகிறது. சில வீட்டு வைத்தியங்கள் மூலம் நெற்றியில் உள்ள டேனை எளிதாக சுத்தம் செய்யலாம்.
மஞ்சள்
மஞ்சள் அதிக மருத்துவ குணம் கொண்டது. மஞ்சள் பல சரும பிரச்சனைகளை நீக்க பயன்படுகிறது. இதனை பயன்படுத்தினால் நெற்றியில் உள்ள கருமை நீங்கும். பச்சை பாலில் மஞ்சளை கலந்து தோல் பதனிடும் இடத்தில் தடவி சிறிது நேரம் விட்டு பின் தண்ணீரில் கழுவவும். டேனிங் பிரச்சனை நீங்கும்.
வெள்ளரிக்காய்
வெள்ளரிக்காயில் ஏராளமான சத்துக்கள் உள்ளன. வெள்ளரிக்காயை உட்கொள்வதால் பல வித ஆரோக்கிய நன்மைகள் ஏற்படும். இதுமட்டுமின்றி, வெள்ளரிக்காய் அழகு சாதனப் பொருளாகவும் பயன்படுத்தப்படுகிறது. வெள்ளரிக்காயைப் பயன்படுத்துவதன் மூலம், ஸ்கின் டேனிங் மற்றும் கருவளையம் போன்ற பிரச்சனைகள் நீங்கும். வெள்ளரிக்காய் துண்டுகளை சருமத்தின் நிறம் மாறிய இடத்தில் மசாஜ் செய்யவும். முகத்தை 30 நிமிடம் அப்படியே விட்டு பின்னர் தண்ணீரில் கழுவினால் தோல் சுத்தமாகும்.
- சினிமா மற்றும் மாடலிங் துறை சார்ந்த பிரபலங்களிடையே இருக்கிறது.
- தற்போது இந்த செயல்பாடு சாதாரண மக்களிடமும் மெதுவாகப் பரவி வருகிறது.
அழகான முகத் தோற்றத்திற்காக காஸ்மெடிக் சர்ஜரி செய்து கொள்வது அவசியமான உயிர் காக்கும் விஷயம் இல்லை என்றாலும், அது தனிநபரின் விருப்பம் சார்ந்தது. ஆனால், தனது உடல் நிலையை கருத்தில் கொண்டு அறுவை சிகிச்சை செய்து கொள்ளலாமா? என்பது குறித்து முடிவு எடுக்க வேண்டும்.
முகம் மற்றும் உடல் அமைப்பை மேம்படுத்துவதற்காக, பிளாஸ்டிக் சர்ஜரி செய்து கொள்ளும் வழக்கம் சினிமா மற்றும் மாடலிங் துறை சார்ந்த பிரபலங்களிடையே இருக்கிறது. தற்போது இந்த செயல்பாடு சாதாரண மக்களிடமும் மெதுவாகப் பரவி வருகிறது. குறிப்பாக உடல் எடையைக் குறைப்பதற்காக பலர் இத்தகைய அறுவை சிகிச்சைகளை செய்து கொள்கின்றனர். பிளாஸ்டிக் சர்ஜரி ஆரோக்கியமானது தானா? அதனால் பின் விளைவுகள் ஏற்படுமா? என்பது குறித்து கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் தீக்காயம் மற்றும் ஒட்டுறுப்பு அறுவை சிகிச்சைத் துறை (பிளாஸ்டிக் சர்ஜரி) தலைமை பேராசிரியர் மருத்துவர் ரமாதேவியிடம் கேட்டோம்.
"பிளாஸ்டிக் சர்ஜரியை மறுசீரமைப்பு சிகிச்சை, ஒப்பனை அறுவை சிகிச்சை, கை அறுவை சிகிச்சை என மூன்று வகையாகப் பிரிக்கலாம். 'மறுசீரமைப்பு அறுவை சிகிச்சை' என்பது பிறவியிலேயே இருக்கும் குறைபாடுகளான உதடு பிளவுகளை சீரமைத்தல், காது மடல்களை சீரமைத்தல் போன்றவற்றுக்காக மேற்கொள்ளப்படுவது. 'கை அறுவை சிகிச்சை' என்பது வெட்டுக்காயம், கை விரல்கள் துண்டாகிவிடுதல் போன்ற சூழலில், வெட்டப்பட்ட இடத்தைச் சேர்த்துத் தைத்து, மீண்டும் இயல்பு நிலைக்குக் கொண்டு வர உதவும்.
மூன்றாவதாக 'ஒப்பனை அறுவை சிகிச்சை'. ஒருவர் தன் உடல் அமைப்பை தனக்கு பிடித்தாற்போல் மாற்றிக்கொள்ள செய்துகொள்வது. இதில் மார்பக சீரமைப்பு, உடல் எடைக் குறைப்பு, உடலில் தேவையற்ற இடங்களில் இருக்கும் சதைகளை நீக்குதல் என அழகு சார்ந்த பல வகைகள் இருக்கின்றன. அழகான முகத் தோற்றத்திற்காக காஸ்மெடிக் சர்ஜரி செய்து கொள்வது அவசியமான உயிர் காக்கும் விஷயம் இல்லை என்றாலும், அது தனிநபரின் விருப்பம் சார்ந்தது.
ஆனால், தனது உடல் நிலையை கருத்தில் கொண்டு அறுவை சிகிச்சை செய்து கொள்ளலாமா? என்பது குறித்து முடிவு எடுக்க வேண்டும். பிளாஸ்டிக் சர்ஜரி செய்து கொள்வதற்கு முன்பு சிலவற்றை கவனத்தில் கொள்ள வேண்டும். முதலில் ஏதாவது உடல் உபாதைகள், இதயம் சார்ந்த பிரச்சினைகள் உள்ளதா? என்பதை உறுதிப்படுத்திக்கொள்வது நல்லது. அறுவை சிகிச்சை செய்து முடிக்க குறிப்பிட்ட கால அவகாசம் ஆகும்.
அதற்காக 'அனஸ்தீசியா' எனப்படும் மயக்க மருந்து கொடுப்பதற்கு உங்கள் உடல் ஒத்துழைக்குமா? உள்ளிட்ட பல்வேறு சந்தேகங்களை மருத்துவர்களிடம் கேட்டு தெளிவு பெற வேண்டும். பிறகு அறுவை சிகிச்சை செய்வது அவசியமானது தானா? என முடிவு எடுக்க வேண்டும். மற்ற சிகிச்சை முறையில் இருப்பது போலவே இதிலும், சில ஆபத்துகள் நிகழலாம். எனவே மருத்துவர்களிடம் தகுந்த ஆலோசனைகள் பெற்று பிளாஸ்டிக் சர்ஜரி செய்து கொள்வதே நல்லது" என்றார் மருத்துவர் ரமாதேவி.
- இதில் உள்ள இரும்புச்சத்து முடிஉதிர்வை கட்டுப்படுத்தும்.
- இளநரையைக் கட்டுப்படுத்தும்.
வெந்தயமானது பெண்களுக்கு சரும மற்றும் கூந்தலில் ஏற்படும் பல்வேறு பிரச்சனைகளுக்கு நிரந்தர தீர்வை தருகிறது.
வெந்தயத்தை நீரில் நன்றாக ஊறவைத்து, அரைத்து முகத்தில் தடவி உலர்ந்ததும் கழுவிவர முகம் பொலிவு பெறும். பாலுடன் சேர்த்து அரைத்தும் முகத்தில் பூசி வரலாம். இரவு முழுவதும் வெந்தயத்தை நீரில் ஊறவைத்து, அந்த நீரினைக் கொண்டு முகத்தினை கழுவிவர சருமத்தில் உள்ள மாசுக்களை நீக்குவதோடு தோலிற்கு ஈரப்பதத்தையும் தருகிறது.
மேலும் இதில் உள்ள வைட்டமின்-சி முகப்பருக்கள் ஏற்படுவதை தவிர்ப்பதோடு, முகச்சுருக்கத்தினை குறைக்கிறது. இதில் உள்ள இரும்புச்சத்து முடிஉதிர்வை கட்டுப்படுத்தும்.
வெந்தயத்தை இரவு முழுவதும் நீரில் ஊறவைத்து மறுநாள் காலையில் அதனை அரைத்து தலையில் தேய்த்து சிறிது நேரம் ஊறவைத்து பின்னர் குளிக்க, முடிஉதிர்வை கட்டுப்படுத்துவதோடு, முடியின் வறட்சி தன்மையை நீக்கி, மிருதுவைத் தரும்.
வெந்தயத்தை தேங்காய் எண்ணையுடன் சேர்த்து காய்ச்சி தலைக்குத் தேய்க்கும் எண்ணையாக பயன்படுத்திவர முடிஉதிர்வைத் தடுக்கும்.
தலையில் பொடுகுத் தொல்லை மற்றும் அரிப்பு காணப்பட்டால் வெந்தயத்தை இரவு முழுவதும் நீரில் ஊறவைத்து மறுநாள் தயிருடன் கலந்து அரைத்து தலையில் பூசி சிறிது நேரம் ஊற வைத்து குளித்து வர பொடுகுத் தொல்லை படிப்படியாகக் குறையும்.
ஊறவைத்த வெந்தயத்தினை கறிவேப்பிலை உடன் சேர்த்து அரைத்து தலையில் பூசிக் குளித்து வர இளநரையைக் கட்டுப்படுத்தும்.
வெந்தயத்தை ஊறவைத்து, தேங்காய் பாலுடனோ அல்லது சிறிதளவு தேங்காய் எண்ணைய்யுடனோ அரைத்து தலையில் பூசி குளித்து வர கேசத்தின் வறட்சி நீங்கி மிருது தன்மை அடையும்.
- நிறைய பெண்களுக்கு கண் இமை அல்லது கண் புருவ முடி இயற்கையாகவே இருப்பதில்லை.
- பெரும்பாலான பெண்களுக்கு உதடுகள் அடர் நிறத்தில்தான் இருக்கின்றன.
''நமக்கு எல்லோருக்குமே, மேக்கப் கலை பற்றி நன்றாக தெரியும். அதில் பலவிதமான மேக்கப் நுட்பங்கள் இருப்பதும் தெரியும். ஆனால் அத்தகைய மேக்கப், ஓரிரு நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்கும். ஆனால் இப்போது நிரந்தரமாக இருக்கக்கூடிய மேக்கப் கலையும் பிரபலமாகி வருகிறது. 'நிரந்தர மேக்கப்', 'செமி நிரந்தர மேக்கப்'... இப்படி முகப்பொலிவையும், சரும அழகையும் நிரந்தரமாக தக்க வைத்துக்கொள்ள, பல்வேறு முயற்சிகள் நடந்து கொண்டிருக்கின்றன. இது உலக அளவில், படுவைரலான விஷயம் என்றாலும், நம் இந்தியாவில் இப்போதுதான் கொஞ்சம் கொஞ்சமாக வேகமெடுக்கத் தொடங்கி இருக்கிறது. குறிப்பாக நம் தமிழ்நாட்டில் இப்போதுதான், அதுபற்றிய புரிதல் உருவாகி வருகிறது'' என்று நிதானமாக பேசத் தொடங்குகிறார், ஜாஸ்மின்.
சென்னை சாந்தோம் பகுதியை சேர்ந்தவரான இவர், டீன் ஏஜ் பெண்கள் மத்தியில் ரொம்ப பிரபலம். அழகுக் கலை சம்பந்தமான பல பிரச்சினைகளுக்கு நிரந்தர மேக்கப் கலை மூலமாக தீர்வு கூறி, தனக்கென பெரிய ரசிகைகள் பட்டாளத்தையே உருவாக்கி வைத்திருக்கிறார். அவர், நிரந்தர மேக்கப் பற்றியும், அதனால் அவர் ஈர்க்கப்பட்டது குறித்தும் பகிர்ந்து கொள்கிறார்.
''நான் பி.காம் படித்திருக்கிறேன். இளங்கலை படிப்பிற்கு பிறகு, வேறு என்ன புதுமையான படிப்புகளை மேற்கொள்ளலாம் என்ற தேடலில்தான், எனக்கு நிரந்தர மேக்கப் பற்றி தெரியவந்தது. சிறுவயதில் இருந்தே, அழகுக் கலையில் ஆர்வம் அதிகம் என்பதால், நிரந்தர மேக்கப் பற்றிய குறுகிய கால படிப்புகளை படித்து முடித்தேன்'' என்று தன்னைப் பற்றி அறிமுகம் செய்து கொண்டு, நிரந்தர மேக்கப் கலை பற்றி விவரிக்க ஆரம்பித்தார்.
''நிரந்தர மேக்கப் என்பது, நிரந்தர அழகுக் கலை. உதாரணத்திற்கு, திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்காக மேக்கப் செய்கிறோம் என நினைத்துக் கொள்ளுங்கள். அந்த மேக்கப் பணியில், பவுடர் பொருட்களை கொண்டு முகத்தை 'பளிச்' என மாற்றுவார்கள். உதட்டு சாயம் பூசி, உதடுகளின் வண்ணத்தை மாற்றுவார்கள். செயற்கை கண் இமைகளைப் பொருத்தி, கண் புருவங்களை நல்ல வடிவில் மாற்றி அழகாக்குவார்கள். இப்படி திருமண வரவேற்பில் நம்மை அழகாக காட்ட, நிறைய மேக்கப் வேலைகள் நடைபெறும். இவை அனைத்தும், தற்காலிகமானவை. அடுத்த சில மணி நேரங்களிலேயே முகத்தில் பூசிய பவுடர் கலைந்து விடும். உதட்டு சாயமும் அழிந்துவிடும். அதுவே, 6 மாதங்களுக்கு, ஒரு வருடத்திற்கு என நிரந்தமாக இருந்தால் எப்படி இருக்கும் என்ற சிந்தனையில்தான், இந்த நிரந்தர மேக்கப் கலை உருவானது'' என்பவர், மருத்துவமும், அழகுக் கலையும் சேர்ந்ததுதான் நிரந்தர மேக்கப் கலை என்கிறார்.
''காஸ்மட்டாலஜி, டெர்மட்டாலாஜி... இவ்விரு துறை சார்ந்த மருத்துவர்களுடன், அழகு கலை நிபுணர்களும், இந்த நிரந்தர மேக்கப் கலையில் முக்கியமானவர்கள். சரும அழகை மேம்படுத்துவது, முகப்பொலிவை மீட்டெடுப்பது, நிறத்தை நிரந்தரமாக மாற்றுவது... போன்றவை எல்லாம் மருத்துவர்களின் நேரடி கட்டுப்பாட்டில் நடக்கக்கூடியவை. ஆனால் கருப்பான இதழ்களை நிறம் மாற்றுவது, கண் புருவங்களை செயற்கை நூலிழை தைத்து நிரந்தரமாக உருவாக்குவது, கண் இமைகளை விருப்பத்திற்கு ஏற்ப மாற்றிக்கொள்வது, கரும்புள்ளிகளை அகற்றுவது, பேஸ் ஒயிட்னிங், பேஸ் கலரிங்... இது போன்றவை எல்லாம் மேக்கப் கலை நிபுணர்களே செய்யக்கூடியது. இத்தகைய மேக்கப் தொழில்நுட்பங்கள், நிரந்தரமாகவே அழகை தக்க வைத்துக்கொள்ள உதவும்'' என்றவரிடம், நிரந்தர மேக்கப் கலையின் அவசியம் என்ன? என்ற கேள்வியை முன்வைத்தோம். அதற்கு அவர் பொறுப்பாக பதில் அளித்தார்.
''யோசிக்கக் கூடிய கேள்விதான் என்றாலும், சமூகத்தில் பல பெண்களும், ஆண்களும் பலவிதமான குறைபாடுகளால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். நிறைய பெண்களுக்கு கண் இமை அல்லது கண் புருவ முடி இயற்கையாகவே இருப்பதில்லை. அப்படி இருந்தாலும், அவை அடர்த்தியாக இல்லாமல், லேசாகவே இருக்கும். அது மிகவும் இயல்பான விஷயம்தான். இருப்பினும் சமூகத்தின் பார்வையில் தங்களையும் இயல்பாக காட்டிக்கொள்ள, அதை சரிசெய்ய ரொம்பவே மெனக்கெடுகிறார்கள். அவ்வப்போது பொருத்திக்கொள்ளக்கூடிய கண் இமைகளுக்கு பதிலாக, மைக்ரோ பிளேடிங் முறையில் நிரந்தரமாக இருக்கக்கூடிய கண் இமைகளை பொருத்திக் கொள்கிறார்கள். அதேபோலதான் உதட்டு நிறமும். எல்லா பெண்களுக்கும், உதடுகள் 'பளிச்' என்ற நிறத்தில், இருப்பதில்லை. பெரும்பாலான பெண்களுக்கு உதடுகள் அடர் நிறத்தில்தான் இருக்கின்றன. அதை உதட்டு சாயங்கள் மூலம் தற்காலிகமாக மறைப்பதற்கு பதிலாக, நிரந்தரமாக எப்படி 'பளிச்' என மாற்றுவது என யோசிக்கிறார்கள். அப்படிப்பட்டவர்களுக்கு, நிரந்தர மேக்கப் ரொம்பவே உபயோகமானதாக இருக்கும்'' என்றவர், இந்த மேக்கப் கலையை பெண்களை விட, ஆண்களும் அதிகமாக பயன்படுத்துகிறார்கள் என்கிறார்.
''புகைப்பழக்கத்தினால் உதடுகள் கருப்பானவர்களும், சரும நோயினால் புருவத்தை இழந்த டீன்-ஏஜ் ஆண்களும், நிரந்தர மேக்கப் செய்து கொள்கிறார்கள். மேலும் முக அழகை மேம்படுத்த பேஸ் கிரீம்களுக்கு பதிலாக, நிரந்தர அழகை பெற நிரந்தர மேக்கப் கலைஞர்களையே நாடுகிறார்கள். மேலும் இது எளிமையான பணியே. 2 முதல் 3 மணிநேரங்களில் மேக்கப் வேலைகள் முடிந்துவிடும்'' என்றவர், இனி வருங்காலங்களில் இதற்கான வரவேற்பு அதிகரிக்கும் என்றும் சொல்கிறார்.
''10 ஆண்டுகளுக்கு முன்பு, மேக்கப் கலைஞர்களை தேடிப்பிடிப்பது சிரமமான ஒன்று. ஆனால் இன்று அப்படியில்லை. திரும்பிய திசை எல்லாம் மேக்கப் கலைஞர்கள் இருக்கிறார்கள். கூடவே, எல்லா பெண்களும், மேக்கப் கலையின் அடிப்படையை தெரிந்து கொண்டு, தாங்களாகவே மேக்கப் போட பழகிக் கொண்டிருக்கின்றனர். இப்படியொரு சூழலில், மேக்கப் கலையை முழுநேர தொழிலாக பார்க்கும் டீன்-ஏஜ் பெண்களுக்கு, நிரந்த மேக்கப் கலை புதிய தொழில் வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுக்கும்.
தற்காலிக மேக்கப் கலைக்கும், நிரந்தர மேக்கப் கலைக்கும் 'பட்ஜெட்' விஷயத்தில் பெரிய வித்தியாசம் இல்லை என்பதால், இனி வருங்காலங்களில் தற்காலிக மேக்கப் கலையை விட, நிரந்தர மேக்கப் கலைக்கே மவுசு அதிகமாக இருக்கும். இதை கருத்தில் கொண்டு, அழகு கலை பயிற்சி நிறுவனங்கள், நிரந்தர மேக்கப் கலையையும் பயிற்றுவிக்க தொடங்கி விட்டன. நிறைய மேக்கப் கலைஞர்களும், தங்களை மேம்படுத்திக் கொள்ள நிரந்தர மேக்கப் கலை பயில்கிறார்கள்'' என்பவர், இது மருத்துவ உலகையும், அழகு கலையையும் மையப்படுத்தி இயங்குவதால், புதுமைக்கு பஞ்சம் இருக்காது என்கிறார்.
''புதுப்புது தொழில்நுட்பங்கள், புதுமையான மருத்துவ முறைகள்... என ஏற்கனவே நிரந்தர மேக்கப், வெளிநாடுகளில் பிரபலமாகிவிட்டது. இப்போது இந்தியாவிலும் பிரபலமாகி வருகிறது. ஓரிரு வருடங்களில், எல்லோரும் அறிந்த மேக்கப் கலையாக இது மாறிவிடும். மக்களின் தேவைக்கு ஏற்ப, மேக்கப் நுட்பங்களில் புதுமையான புரட்சிகளும் ஏற்படும்'' என்றவர், சின்னத்திரை-வெள்ளித்திரை நட்சத்திரங்கள், இதுபோன்ற நிரந்தர மேக்கப் கலைகளினாலேயே, நிரந்தர முகப்பொலிவு பெறுகின்றனர் என்ற கருத்துடன் விடைபெற்றார்.
- ஆரி ஒர்க் தையல் தான் பெண்களிடம் பிரபலமாக இருக்கிறது.
- சேலையின் விலை ரூ.5 ஆயிரம், ஜாக்கெட் தையல் கூலி ரூ.15,000.
அழகை விரும்பாதவர்கள் இருக்க மாட்டார்கள். அதிலும் பெண்கள் கொஞ்சம் அதிகமாகவே அழகை விரும்புவார்கள், ரசிப்பார்கள். இது அவர்களின் இயல்பான குணம்.
அதனால் தான் ஆடை அலங்காரங்களை பொறுத்தவரை ஆண்களை விட பெண்களுக்கு பல மடங்கு அதிகமாக இருக்கும். விதவிதமான ஆடை வடிவமைப்புகளை டிசைனர்கள் உருவாக்கி கொண்டே வருவார்கள்.
புதிதாய் கலை நயத்துடன் என்ன வந்தாலும் அதை வாங்கி அணிந்து பயன்படுத்துவதில் பெண்கள் அதிகமான ஆர்வம் காட்டுவார்கள். இதை ஜவுளி கடைகளுக்கு செல்லும்போது எல்லோரும் பார்க்கவும் முடியும், உணரவும் முடியும்.
எத்தனை சேலைகளை புரட்டிப் புரட்டிப் பார்த்தாலும் மீண்டும் மீண்டும் பார்த்துக் கொண்டே இருப்பார்கள்.கல்லிலே கலை வண்ணம் கண்டான்.... என்று தான் முன்பெல்லாம் சொல்ல கேள்விப்பட்டி ருக்கிறோம். ஆனால் இப்போது பெண்களின் சேலை- ஜாக்கெட்டுகளில் தங்கள் கற்பனை களையும், கைவண்ணத்தையும் காட்டி கவருகிறார்கள்.
இப்போது பெண்களை கவருவதில் பிரபலமாக இருப்பது ஆரி ஒர்க் என்ற கலைநயம் மிக்க தையல்தான். சுமார் 15 ஆண்டுகளுக்கு முன்பு வரை வட மாநிலங்களில் பிரபலமாக இருந்த இந்த வேலைப்பாடு கொஞ்சம் கொஞ்சமாக தமிழகத்திலும் பரவத் தொடங்கியது.
இப்போது தமிழகம் முழுவதும் இந்த ஆரி ஒர்க் தையல் தான் பெண்களிடம் பிரபலமாக இருக்கிறது. ஒரு பட்டு புடவை குறைந்த பட்சம் ரூ. 5000- க்கு எடுத்து விடுவார்கள். ஆனால் அதற்கான ஜாக்கெட்டை இந்த ஆரி ஒர்க் வேலைப்பாடு மூலம் தயார் செய்வதற்கு குறைந்தபட்சம் ரூ. ஆயிரம் முதல் 50 ஆயிரம் வரை இருக்கிறது. கேட்டால் அடேங்கப்பா என்று ஆச்சரியப்பட தோன்றும்.
ஆனால் இதுதான் இன்று பெண்களிடையே மிகப்பெரிய மோகத்தை உருவாக்கி இருக்கிறது. மணப்பெண்ணுக்கு பட்டு சேலையின் மதிப்பு சராசரியாக ரூ.25 ஆயிரம் என்றால் அவர்களுக்கு ஜாக்கெட் தைப்பதற்கான கூலி ரூ. 40 ஆயிரம் முதல் 50 ஆயிரம் வரை ஆகிறது. குடும்பச் சூழ்நிலையை கருதி ரூ.2000 முதல் 5000 அல்லது 10 ஆயிரத்திற்குள் முடித்து விடுபவர்களும் இருக்கிறார்கள்.
இந்த வேலைப்பாடு ஜாக்கெட்டில் தங்க நிறத்திலான முத்துக்களை தங்கம் மற்றும் வெள்ளை நிறத்திலான மிகச்சிறிய அளவிலான முத்துக்களை வடிவத்திற்கு ஏற்ப கோர்ப்பது தான். என்ன வடிவத்தை என்ன வேலை பாட்டை விரும்புகிறோமோ அதை அந்த ஜாக்கெட்டில் கொண்டு வர முடியும். விதவிதமான பறவைகள் பூக்கள் செடி கொடிகள் இலைகள் போன்று பல்வேறு விதமான வடிவமைப்பு-களை இந்த ஜாக்கெட்டில் கொண்டு வந்து விடுகிறார்கள்.
இப்போது அதையும் தாண்டி ஜாக்கெட்டில் இதே வேலைப்பாட்டில் பெயர்களையும் பொறித்துக் கொள்கிறார்கள். இன்னும் சிலர் அதிலும் ஒரு படி மேலே போய் விட்டார்கள். காதலித்து திருமணம் செய்பவர்கள் காதலித்த காலத்தில் சில சுவாரஸ்யமான அனுபவங்களை சந்தித்து இருப்பார்கள். அதைக் கூட கற்பனையில் காட்சியாக்கி தங்கள் பட்டுக்களில் பார்டரில் இந்த ஆரி ஒர்க் மூலம் செதுக்கி விடுகிறார்கள்.
இந்த தொழிலில் வட மாநிலத்தை சேர்ந்த தொழிலாளர்கள் பெருமளவில் ஈடுபடுகிறார்கள். நம்மூர் தையல்காரர்களும் இந்த ஆரி ஒர்க் வேலைப்பாடு செய்வதற்காக வடமாநில தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்தி வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. பிழைக்க தெரிந்தவன் எப்படி வேண்டுமானாலும் சம்பாதிப்பான் என்பதற்கு இதுவும் ஒரு உதாரணம். இது கலைஞர்களின் கற்பனை திறனை வெளிப்படுத்தி சம்பாதிக்கும் அற்புதமான கலை வேலைப்பாடு.
- இந்த சரும பொடி எந்த வித அலர்ஜியையும் ஏற்படுத்தாது.
- இந்த பொடியை எப்படி செய்வது என்பதை பற்றி பார்ப்போம்…
நம் முன்னோர்கள் பயன்படுத்திய இயற்கையான சரும தங்க குளியல் பொடியை எப்படி செய்வது என்பதை பற்றி பார்ப்போம்…
இந்த சரும பொடி எந்த வித அலர்ஜியையும் ஏற்படுத்தாது. முக்கியமாக பருக்கள், தழும்பு, கரும்புள்ளி போன்ற எந்த விதமான தோல் அலர்ஜியையும் குணப்படுத்தும்.
செய்முறை
ரோஜா பூ - 1 கப்
ஆவாரம் பூ - 1 கப்
பச்சை பயிறு - அரை கப்
கஸ்தூரி மஞ்சள்- அரை கப்
பூலான் கிழங்கு பொடி - 2 டீஸ்பூன்
மிக்ஸி ஜாரில் ஆவாரம் பூ, பச்சை பயிறு, ரோஜா பூ, சேர்த்து நைசாக அரைத்து கொள்ளவும். அடுத்து அதனுடன் கஸ்தூரி மஞ்சள் பொடி பூலான் கிழங்கு பொடி சேர்த்து அரைத்துகொள்ளவும்.
இப்போது அருமையான தங்க குளியல் பொடி தயார்…
இதை அனைவரும் உபயோகப்படுத்தலாம்.. மூன்று மாதம் வரை இந்த தங்க குளியல் பொடியை பயன்படுத்திக்கொள்ளலாம்..
பயன்படுத்தும் முறை
இரண்டு ஸ்பூன் இந்த பொடியை கிண்ணத்தில் எடுத்துக்கொண்டு அதனுடன், ரோஸ் வாட்டர், அல்லது பால், தயிர் எதனுடன் வேண்டும் என்றாலும் சேர்த்துகொண்டு கலக்கி கொள்ள வேண்டும்.
அதன் பின்னர் உடல் முழுவதும் தடவிக்கொண்டு, அரை மணிநேரம் கழித்து குளித்துவிடலாம்.. ஒரு வாரத்திற்குள் இதன் சிறப்பை நீஙகள் காணலாம்…
- மருதாணி கறைகளை அகற்றுவதில் ஆலிவ் எண்ணெய் சிறப்பாக செயல்படும்.
- எலுமிச்சையில் இருக்கும் சிட்ரிக் அமிலம் மெகந்தியை விரைவாக நீக்கக்கூடியது.
பெண்கள் கைகளிலும், கால்களிலும் மருதாணி வைத்துக்கொள்வது பல காலமாக வழக்கத்தில் இருந்து வருகிறது. மருதாணி இலைகளுடன் மேலும் சில இயற்கையான பொருட்களைச் சேர்த்து, பக்குவமாக அரைத்து கைகளில் வைத்துக்கொள்வதற்கு தற்போது பலருக்கும் நேரமில்லை. அதனால் பெரும்பாலானவர்கள் மருதாணி கோன்களை நாடுகின்றனர். இதன் மூலம் வரையப்படும் 'மெகந்தி டிசைன்கள்' கண்களைக் கவரக் கூடியதாக இருக்கும். அதேசமயம் ஒன்றிரண்டு நாட்களிலேயே நிறம் திட்டுத்திட்டாக மங்கத் தொடங்கும். அதை சீக்கிரமே முழுவதுமாக நீக்குவதற்கு பலரும் விரும்புவார்கள். அதற்கான குறிப்புகளை இங்கே காண்போம்.
ஆன்டி பாக்டீரியல் தன்மை கொண்ட சோப்புகள், இறந்த செல்களை நீக்கும் ஆற்றல் கொண்டவை. இவை கைகளில் படிந்துள்ள நிறங்களை விரைவாக மறையச் செய்யும். எனவே அடிக்கடி கைகளை ஆன்டி பாக்டீரியல் சோப் கொண்டு கழுவவும். பின்பு கைகளில் சிறிது தேங்காய் எண்ணெயைத் தடவவும். உப்பு சிறந்த சுத்தப்படுத்தியாகும். இது கைகளில் படிந்துள்ள நிறங்களை எளிதாக நீக்கும். ஒரு கிண்ணத்தில் உப்பு கலந்த தண்ணீரை எடுத்துக்கொள்ளுங்கள். கைகளை அதில் மூழ்க வையுங்கள். 20 நிமிடம் கழித்து வெளியே எடுத்து பருத்தித் துணியால் ஈரத்தை ஒற்றி எடுங்கள். இவ்வாறு தினமும் ஒரு வேளை செய்துவந்தால் மருதாணி விரைவாக நீங்கும்.
முகத்துக்கு உபயோகிக்கும் ஸ்கிரப்பர் கிரீமை கைகளில் பூசி மென்மையாக 'ஸ்கிரப்' செய்யுங்கள். இதனால் கைகளில் வரைந்துள்ள மெகந்தி முழுவதுமாக நீங்கவில்லை என்றாலும், அதன் நிறம் நன்றாக மங்கி இருக்கும்.
வெதுவெதுப்பான தண்ணீர் மருதாணியின் மூலக்கூறுகளை தளர்ச்சி அடையச் செய்யும். எனவே கைகளை லேசான சூடுள்ள தண்ணீரில் சிறிது நேரம் வைத்திருந்து மென்மையாக 'ஸ்கிரப்' செய்யுங்கள்.
மருதாணி கறைகளை அகற்றுவதில் ஆலிவ் எண்ணெய் சிறப்பாக செயல்படும். ஆலிவ் எண்ணெய்யுடன் சிறிது உப்பைக் கலக்கவும். இந்த எண்ணெய்யில் பஞ்சைத் தொட்டு கைகளில் மென்மையாகத் தேய்க்கவும். இதை 10 நிமிடங்கள் அப்படியே வைத்திருக்கவும். பின்பு சோப் போட்டு கைகளைக் கழுவவும். இவ்வாறு ஒரு நாளில் பல முறை செய்தால் மெகந்தி விரைவாக நீங்கும்.
எலுமிச்சையில் இருக்கும் சிட்ரிக் அமிலம் மெகந்தியை விரைவாக நீக்கக்கூடியது. எலுமிச்சை சாற்றை நேரடியாக கைகளில் தடவலாம் அல்லது எலுமிச்சை சாறு கலந்த தண்ணீரில் கைகளை சிறிது நேரம் மூழ்கி இருக்கச் செய்யலாம்.
பேக்கிங் சோடா மற்றும் எலுமிச்சை இரண்டும் பிளீச் செய்யும் தன்மை கொண்டவை. இவை இரண்டையும் பசை போலக் கலந்து கைகளில் மெகந்தி வரைந்துள்ள இடங்களில் பூசவும். 10 நிமிடம் கழித்து ஸ்கிரப்பர் கொண்டு வட்ட இயக்கத்தில் மென்மையாக ஸ்கிரப் செய்யவும். பின்னர் இளஞ்சூடான நீரில் கைகளைக் கழுவவும்.
நகங்களில் படிந்துள்ள மெகந்தியை நெயில் பாலிஷ் ரிமூவர் கொண்டு எளிதாக அகற்றலாம்.
- தேவைக்கும் அதிகமான பவுண்டேஷனை பயன்படுத்த வேண்டாம்.
- பவுண்டேஷனை தாடையின் ஓரத்தில் பரிசோதனை செய்து வாங்குவது நல்லது.
மேக்கப் என்றாலே, அதற்கு அடித்தளமாக இருப்பது பவுண்டேஷன் (Foundation) தான். சருமத்தின் நிறத்துக்கு, தன்மைக்கு ஏற்ப பவுண்டேஷனை தேர்வு செய்யும்போதுதான், மேக்கப் சரியான முறையில் வெளிப்படும். பவுண்டேஷன் சரியாக இல்லையெனில், மொத்த மேக்கப்பும் சொதப்பிவிட வாய்ப்புள்ளது. இப்படி, மேக்கப்பில் மிக முக்கிய அம்சமான பவுண்டேஷனை சருமத்துக்கு ஏற்ப எப்படி தேர்ந்தெடுப்பது என்பது குறித்துப் பார்க்கலாம்.
பவுண்டேஷன் பயன்படுத்தும் முன் முதலில் கவனிக்க வேண்டிய விஷயம் சரும வகைதான். எண்ணெய்ப்பசை சருமம், வறண்ட சருமம், நார்மல் சருமம், காம்பினேஷன் சருமம் என இந்த அடிப்படை நான்கு சரும வகைகளில் என்ன மாதிரியான சருமத்தை கொண்டுள்ளோம் என்பதை கொண்டே பவுண்டேஷனை தேர்ந்தெடுக்க வேண்டும்.
எண்ணெய்ப்பசை சருமம் என்றால் பவுடர் பவுண்டேஷன் அல்லது எண்ணெய் இல்லாத திரவ வடிவிலான பவுண்டேஷனை (Liquid Foundation) பயன்படுத்தவும்.
வறண்ட சருமம் என்றால் ஈரப்பதம் கொடுக்கவல்ல லிக்விட் பவுண்டேஷன், க்ரீம் பவுண்டேஷன் பயன்படுத்தலாம்.
காம்பினேஷன் சருமம் என்றால் லிக்விட் அல்லது பவுடர் பவுண்டேஷன் பயன்படுத்தலாம்.
முகப்பரு உள்ள மற்றும் சென்சிட்டிவ் சருமம் என்றால், ஆல்கஹால் மற்றும் நறுமண பொருள்கள் கலந்த பவுண்டேஷனை தவிர்ப்பது நல்லது.
சரும நிறத்தை முகத்தில் இல்லாமல் தாடை பகுதி அல்லது கழுத்துப் பகுதி நிறத்தை கொண்டே கணக்கிட வேண்டும். அப்படி செய்வதன் மூலமே பவுண்டேஷனில் சரியான ஷேடை (shade) தேர்ந்தெடுக்க முடியும். மேலும் குளிர்காலம், கோடைக்காலம் என்று சருமத்தின் நிறம் மாறும் என்பதால் ஒவ்வொரு முறை பவுண்டேஷன் வாங்கும் போது நிறத்தை கவனிப்பது நல்லது.
சருமத்தின் அண்டர்டோன் (Undertone) பற்றிய அறிய வேண்டும். வார்ம் (Warm) அண்டர்டோன் உள்ளவர்களின் சருமம் பீச், மஞ்சள், அல்லது தங்க நிறத்தில் இருக்கும். இவர்கள் வார்ம் டோன்க்கு பொருந்தும் பவுண்டேஷன் ஷேடை (shade) தேர்ந்தெடுக்க வேண்டும். கூல் (Cool) அண்டர்டோன் உள்ளவர்களின் சருமம் பிங்க், ரெட் நிறத்தில் இருக்கும். இவர்கள் கூல் டோன்க்கான பவுண்டேஷன் ஷேடை தேர்ந்தெடுக்க வேண்டும். நியூட்ரல் (Neutral) அண்டர்டோன் உள்ளவர்கள், மேலே சொன்ன இரண்டின் சீரான கலவை சருமத்தை கொண்டிருப்பார்கள்.
பவுண்டேஷன் உங்கள் சருமத்தில் எந்த மாதிரியான இறுதிப் பொலிவை (Finish) ஏற்படுத்த விருபுகிறீர்களோ, அதற்கேற்ப dewy, matte, semi-matte மற்றும் luminizing finish வகைகளில் ஒன்றை தேர்ந்தெடுக்கலாம்.
பவுண்டேஷனை வாங்கும் முன், பெரும்பாலும் அதனை கைகளில் பரிசோதித்து வாங்குவோம். ஆனால் கையின் நிறமும், முகத்தின் நிறமும் ஒன்றுபோல் இருக்காது என்பதால் தாடையின் ஓரத்தில் பரிசோதனை செய்து வாங்குவது நல்லது. தாடையின் நிறம்தான் முகத்திற்கேற்ப இருக்கும். தற்போது விர்ச்சுவல் ட்ரை வசதி இருப்பதால் அதையும் பயன்படுத்தலாம்.
டிப்ஸ்
* பவுண்டேஷனை முகத்தில் அப்ளை செய்ய வட்டமான பவுண்டேஷன் பிரெஷ், மேக்கப் ஸ்பொஞ் என வசதிக்கு ஏற்ப வாங்கிக்கொள்ளவும். ஆனால் அது தரமானதாக இருந்தால்தான் சிறப்பான ரிசல்ட் கிடைக்கும்.
* பவுண்டேஷனுடன் ப்ரைமர் (Primer) பயன்படுத்துவது நல்ல, நீடித்த மேக்கப்புக்கு அவசியம்.
* தேவைக்கும் அதிகமான பவுண்டேஷனை பயன்படுத்த வேண்டாம். சிறிது சிறிதாக தேவையான இடங்களில் இட்டு, சீராக தடவும் போது இயற்கையான லுக் கிடைக்கும்.
- உதிர்ந்த முடியானது வளராமல் இருக்கும்.
- பகலில் சாப்பிட்டதும் பலருக்கும் தூங்குவது வழக்கம்.
பரம்பரையாக முடி கொட்டுதல் என்பது ஒரு காரணம் என்றாலும், நாம் நமது பண்புகளை மாற்றிக் கொள்வதன் மூலம் நிச்சயமாக இதை ஜெயிக்க முடியும். ஆம், பரம்பரையாக செய்த சில தவறுகளை முத்திரைகள் மூலமே சரி செய்ய முடியும்.
உடலில் அதிகமான உஷ்ணம் காரணமாக பிட்யூட்டரி, பீனியல் சுரப்பி ஒழுங்காக சுரக்காமல், அதில் சில குறைபாடுகள் ஏற்படுவதால் முடி கொட்டுகிறது.
தொடர்ந்து காலை முதல் இரவு வரை அதிகமாக சிந்தித்த வண்ணம் இருப்பவர்களுக்கு முடி கொட்டும். பொதுவாக பெரிய நிறுவனங்களில் உயர் பதவியில் உள்ளவர்களின் தலை முடி முழுக்கக் கொட்டி, வழுக்கையாகத்தான் இருக்கும். இவர்கள் தொடர்ந்து மூளைக்கு அதிக வேலை கொடுப்பதால் மூளை நரம்புகள் கொதிப்படைந்து இப்படி நிகழ்கிறது.
பலருக்கும் ஆழ்ந்த நித்திரை இருக்காது. அதனால் மன அழுத்தம், மனச்சோர்வு, நரம்பு பலவீனம் உள்ளிட்டவை ஏற்படுகிறது. இதனால் முடி கொட்டும். உதிர்ந்த முடியானது வளராமல் இருக்கும்.
நாம் சாப்பிடும் உணவு மிகவும் காரமாக இருந்தாலோ, எண்ணெய்ப் பண்டங்கள் அதிகமாக எடுத்தாலோ, மாமிசம் அதிகமாக உட்கொண்டாலோ, உடலில் நாளமில்லா சுரப்பிகள் ஒழுங்காக சுரக்காது. இதனால் முடி கொட்டக்கூடிய நிலை ஏற்படுகிறது.
பகலில் சாப்பிட்டதும் பலருக்கும் தூங்குவது வழக்கம். இதனாலும் முடி கொட்டும்.அதேபோல் கணவன் / மனைவி அளவுக்கு மீறி அடிக்கடி தாம்பத்திய உறவு வைத்துக் கொண்டாலும் சுரப்பிகளில் மாறுபாடு ஏற்பட்டு, முடி கொட்டும்.
ஆண்கள் வாரம் ஒருமுறை சனி / புதனும், பெண்கள் செவ்வாய் / வெள்ளியும் எண்ணெய் தேய்த்துக் குளிக்க வேண்டும். அப்படிக் குளிக்காதவர்களுக்கு உடல் மற்றும் மன உஷ்ணத்தினால் சுரப்பிகள் சரியாக சுரக்காமல் முடி கொட்ட ஆரம்பிக்கும்.
உப்புத் தண்ணீரில் தொடர்ந்து குளிப்பதாலோ, அடிக்கடி வெளியூர் செல்பவர்கள் தண்ணீரை மாற்றி மாற்றி குளிப்பதாலோ அவர்களின் உடலில் சுரப்பிகளின் மாற்றத்தால் தலைமுடி கொட்டும்.
- நேரத்திற்கு தூங்குவது கிடையாது.
- நேரத்திற்கு சாப்பிடுவது கிடையாது.
சில பேருக்கு 25 வயதைக் கடந்த உடனேயே வயதான தோற்றம் வர தொடங்கிவிடும். முகத்தில் தோல் சுருக்கம் ஏற்பட தொடங்கும். கண்களுக்கு கீழே தோல் சுருங்கி இருக்கும். வாயை சுற்றி சுருக்கம் வரத் தொடங்கியிருக்கும். கழுத்தில் சுருக்கங்கள் அதிகமாக வரத் தொடங்கும்.
முதலில் நம்முடைய தோல் சுருக்குவதற்கு காரணம், நம்முடைய வாழ்க்கை முறையில் ஏற்பட்டிருக்கும் மாற்றங்கள் தான். நேரத்திற்கு தூங்குவது கிடையாது. நேரத்திற்கு சாப்பிடுவது கிடையாது. இயற்கையாகக் கிடைக்கக்கூடிய தண்ணீரை நாம் பருகுவது கிடையாது. நல்ல உணவை சாப்பிடுவது கிடையாது. ஊட்டச்சத்து உடலுக்கு கிடைப்பதில் குறைபாடு. இவை எல்லாவற்றையும் தாண்டி இன்றைய சூழ்நிலையில் இருக்கக் கூடிய மன அழுத்தம். இவைகள் எல்லாம் ஒன்று சேரும் போது நமக்கு வயதான தோற்றம் இளமையிலேயே வந்துவிடுகிறது.
வயதான தோற்றத்தைத் தள்ளிப் போட வேண்டும் என்றால் நம்முடைய உணவு பழக்க வழக்கத்தில் இயற்கையாக கிடைக்கும் பழங்கள் காய்கறிகள் பயிறு வகைகளை அதிகமாக சேர்த்துக்கொள்ள வேண்டும். முகத்தில் இருக்கும் சுருக்கத்தை நீக்க வீட்டிலிருந்தபடியே பேஸ் மாஸ்க் தயாரிக்கலாம் வாங்க..
மைசூர் பருப்பு 2 ஸ்பூன், பச்சரிசி 2 ஸ்பூன், இந்த இரண்டு பொருட்களையும் எடுத்து மிக்ஸியில் போட்டு நைஸாகப் பொடித்து வைத்துக்கொள்ளுங்கள். இந்தப் பொடியை தேவையான அளவு அதாவது 2 ஸ்பூன் சிறிய பௌலில் போட்டுக் கொள்ள வேண்டும். இதோடு தயிர் – 1 ஸ்பூன், அரைத்த தக்காளி விழுது – 1 ஸ்பூன், கஸ்தூரி மஞ்சள் – 1/2 ஸ்பூன், இந்த பொருட்களை எல்லாம் சேர்த்து விழுதாக கலந்து இதை உங்களுடைய முகத்தில் கீழ்ப் பக்கத்தில் இருந்து மேல்பக்கம் அப்ளை செய்து கொள்ள வேண்டும். கழுத்திலிருந்து பேஸ் மாஸ்க் போட வேண்டும்.
பத்து நிமிடம் கழித்து உங்களுடைய தோல் இறுக்கி பிடிக்கத் தொடங்கும். அதன் பின்பு கையில் லேசாக தண்ணீரைத் தொட்டு உங்களுடைய முகத்தில் லேசாக மசாஜ் செய்து குளிர்ந்த தண்ணீரில் சோப்பு போடாமல் கழுவி வந்தால், முகத்தில் நல்ல வித்தியாசம் தெரியும். வாரத்தில் இரண்டு நாட்கள் இதை செய்து வந்தாலே வயதான தோற்றம் தள்ளிப் போகும். முகத்தில் சுருக்கம் வந்தவர்கள் இதை பயன்படுத்தினால் படிப்படியாக முகச்சுருக்கம் குறையும். முகத்தில் சுருக்கம் இல்லாதவர்கள் இளமையாக இருக்கும்போதே இந்த பேக்கை தொடர்ந்து பயன்படுத்தி வந்தால் முகத்தில் வரக்கூடிய சுருக்கம் தள்ளிப்போகும். முயற்சி செய்து பாருங்கள்.
- பெரும்பாலும் திருமணமாகாத இளம் பெண்கள்தான் தாவணி அணிகிறார்கள்.
- டீன் ஏஜ் தோற்றத்தை தக்கவைக்கக்கூடியது.
அன்றைய காலகட்டத்தில் பருவம் அடைந்த பெண்கள் தாவணி அணியும் வழக்கத்தை பின்பற்றினர். நவ நாகரிக மோகம் மேற்கத்திய ஆடைகளை நாட வைத்ததன் காரணமாக தாவணி அணியும் வழக்கம் மெல்ல மெல்ல மறைந்து கொண்டிருக்கிறது. சடங்கு, சம்பிரதாயத்திற்காக மட்டும் தாவணி அணியும் வழக்கம் நடைமுறையில் இருக்கிறது.
இன்றும் கிராமங்களில் தாவணி அணியும் இளம் பெண்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். பாரம்பரிய ஆடையான இதனை சுப நிகழ்வுகளின்போது அணிந்து கொள்வதற்கு சில இளம் பெண்கள் ஆர்வம் காட்டுகிறார்கள். அவர்கள் சவுகரியமாக உடுத்துவதற்கு ஏற்ப தாவணிகள் தயாரிக்கப்படுகின்றன. இன்றைய பேஷன் உலகில் தாவணி ஏன் அணிய வேண்டும் என்பதற்கான காரணங்கள்:
இளமை : பெரும்பாலும் திருமணமாகாத இளம் பெண்கள்தான் தாவணி அணிகிறார்கள். அதற்கேற்ப இது இளமை உணர்வை வெளிப்படுத்தக்கூடியது. டீன் ஏஜ் தோற்றத்தை தக்கவைக்கக்கூடியது. சேலையை போல் தாவணி முதிர்ச்சியான தோற்றத்தை கொண்டிருக்காது. நடிகைகள் கூட பல சந்தர்ப்பங்களில் தாவணி அணிய விரும்புகிறார்கள்.
சவுகரியம் : சேலையை விட தாவணி அணிந்து கொண்டு நடப்பதற்கு சவுகரியமாக இருக்கும். நவ நாகரிக உடையை போல் இறுக்கமாக உடுத்த வேண்டியதிருக்காது. தாவணிக்கு பொருத்தமாக உடுத்தப்படும் பாவாடை தளர்வாக இருக்கும். துப்பட்டாவும் அசவுகரியத்தை கொடுக்காது. நேர்த்தியாக இருக்கும். இப்போது படங்களில் நடிகைகள் தாவணி அணிவது பேஷனாகி இருக்கிறது. சமந்தா, ரகுல் ப்ரீத்சிங் போன்ற நடிகைகள் விருது விழாக்கள், ஆடியோ வெளியீட்டு விழாக்களில் தாவணியில் உலா வந்திருக்கிறார்கள்.
ஸ்டைல் : தாவணி பாரம்பரியமான பழைய ஆடை என்றாலும், தற்போதைய டிரெண்டுக்கு ஏற்ப உருமாற்றி வடிவமைக்கப்பட்டுள்ளது. அதனால் தாவணியை ஸ்டைலாக அணியலாம். நேர்த்தியான தோற்றத்தையும் பெற முடியும். பாவாடை, ரவிக்கையின் நிறம், தாவணியின் நிறம் என ஒவ்வொன்றின் தேர்விலும் இன்றைய பேஷன் உலகுக்கு ஈடு கொடுக்கும் அம்சங்கள் உள்ளன. பேஷன் டிசைனர்களும் நடிகைகள் உடுத்துவதற்கு ஏற்ப ஸ்டைலிஷான வடிவமைப்புகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறார்கள்.
பாரம்பரியம் :திருமண விழாவிலோ அல்லது கோவில் திருவிழாவிலோ பாரம்பரிய உடை உடுத்த விரும்பும் இளம் பெண்களுக்கு தாவணி பொருத்தமான தேர்வாக இருக்கும். பட்டு துணிகளிலும் தாவணிகள் தயாரிக்கப்படுகின்றன. உடுத்தும் ஆடைக்கு ஏற்ப ஒப்பனை செய்வதன் மூலம் பளிச் தோற்றத்தில் மிளிரலாம். பாரம்பரிய நகைகள் அணிவதும் கூடுதல் பொலிவு சேர்க்கும்.
தனித்துவம் : சுப நிகழ்வுகளுக்கு சுடிதார், லெஹெங்கா போன்ற ஆடைகளுக்கு மாற்றாக நேர்த்தியாக தாவணி அணிந்து சென்றால் கூட்டத்தில் நீங்கள் தனித்து தெரிவீர்கள். நவ நாகரிக ஆடைகள் பிரமாண்டமாக காட்சி அளித்தாலும் தாவணியுடன் ஒப்பிடும்போது மற்றவர்களின் கவனம் உங்கள் பக்கம் ஈர்க்கப்படும். தங்களை தனித்துவமாக காட்டிக்கொள்ள ஆப் சாரி (Half Saree) என்று அழைக்கப்படும் தாவணி எப்போதுமே சிறந்த தேர்வாக அமையும்.






