search icon
என் மலர்tooltip icon

    அழகுக் குறிப்புகள்

    பெண்களை கவரும் ஆரி ஒர்க்
    X

    பெண்களை கவரும் ஆரி ஒர்க்

    • ஆரி ஒர்க் தையல் தான் பெண்களிடம் பிரபலமாக இருக்கிறது.
    • சேலையின் விலை ரூ.5 ஆயிரம், ஜாக்கெட் தையல் கூலி ரூ.15,000.

    அழகை விரும்பாதவர்கள் இருக்க மாட்டார்கள். அதிலும் பெண்கள் கொஞ்சம் அதிகமாகவே அழகை விரும்புவார்கள், ரசிப்பார்கள். இது அவர்களின் இயல்பான குணம்.

    அதனால் தான் ஆடை அலங்காரங்களை பொறுத்தவரை ஆண்களை விட பெண்களுக்கு பல மடங்கு அதிகமாக இருக்கும். விதவிதமான ஆடை வடிவமைப்புகளை டிசைனர்கள் உருவாக்கி கொண்டே வருவார்கள்.

    புதிதாய் கலை நயத்துடன் என்ன வந்தாலும் அதை வாங்கி அணிந்து பயன்படுத்துவதில் பெண்கள் அதிகமான ஆர்வம் காட்டுவார்கள். இதை ஜவுளி கடைகளுக்கு செல்லும்போது எல்லோரும் பார்க்கவும் முடியும், உணரவும் முடியும்.

    எத்தனை சேலைகளை புரட்டிப் புரட்டிப் பார்த்தாலும் மீண்டும் மீண்டும் பார்த்துக் கொண்டே இருப்பார்கள்.கல்லிலே கலை வண்ணம் கண்டான்.... என்று தான் முன்பெல்லாம் சொல்ல கேள்விப்பட்டி ருக்கிறோம். ஆனால் இப்போது பெண்களின் சேலை- ஜாக்கெட்டுகளில் தங்கள் கற்பனை களையும், கைவண்ணத்தையும் காட்டி கவருகிறார்கள்.

    இப்போது பெண்களை கவருவதில் பிரபலமாக இருப்பது ஆரி ஒர்க் என்ற கலைநயம் மிக்க தையல்தான். சுமார் 15 ஆண்டுகளுக்கு முன்பு வரை வட மாநிலங்களில் பிரபலமாக இருந்த இந்த வேலைப்பாடு கொஞ்சம் கொஞ்சமாக தமிழகத்திலும் பரவத் தொடங்கியது.

    இப்போது தமிழகம் முழுவதும் இந்த ஆரி ஒர்க் தையல் தான் பெண்களிடம் பிரபலமாக இருக்கிறது. ஒரு பட்டு புடவை குறைந்த பட்சம் ரூ. 5000- க்கு எடுத்து விடுவார்கள். ஆனால் அதற்கான ஜாக்கெட்டை இந்த ஆரி ஒர்க் வேலைப்பாடு மூலம் தயார் செய்வதற்கு குறைந்தபட்சம் ரூ. ஆயிரம் முதல் 50 ஆயிரம் வரை இருக்கிறது. கேட்டால் அடேங்கப்பா என்று ஆச்சரியப்பட தோன்றும்.

    ஆனால் இதுதான் இன்று பெண்களிடையே மிகப்பெரிய மோகத்தை உருவாக்கி இருக்கிறது. மணப்பெண்ணுக்கு பட்டு சேலையின் மதிப்பு சராசரியாக ரூ.25 ஆயிரம் என்றால் அவர்களுக்கு ஜாக்கெட் தைப்பதற்கான கூலி ரூ. 40 ஆயிரம் முதல் 50 ஆயிரம் வரை ஆகிறது. குடும்பச் சூழ்நிலையை கருதி ரூ.2000 முதல் 5000 அல்லது 10 ஆயிரத்திற்குள் முடித்து விடுபவர்களும் இருக்கிறார்கள்.

    இந்த வேலைப்பாடு ஜாக்கெட்டில் தங்க நிறத்திலான முத்துக்களை தங்கம் மற்றும் வெள்ளை நிறத்திலான மிகச்சிறிய அளவிலான முத்துக்களை வடிவத்திற்கு ஏற்ப கோர்ப்பது தான். என்ன வடிவத்தை என்ன வேலை பாட்டை விரும்புகிறோமோ அதை அந்த ஜாக்கெட்டில் கொண்டு வர முடியும். விதவிதமான பறவைகள் பூக்கள் செடி கொடிகள் இலைகள் போன்று பல்வேறு விதமான வடிவமைப்பு-களை இந்த ஜாக்கெட்டில் கொண்டு வந்து விடுகிறார்கள்.

    இப்போது அதையும் தாண்டி ஜாக்கெட்டில் இதே வேலைப்பாட்டில் பெயர்களையும் பொறித்துக் கொள்கிறார்கள். இன்னும் சிலர் அதிலும் ஒரு படி மேலே போய் விட்டார்கள். காதலித்து திருமணம் செய்பவர்கள் காதலித்த காலத்தில் சில சுவாரஸ்யமான அனுபவங்களை சந்தித்து இருப்பார்கள். அதைக் கூட கற்பனையில் காட்சியாக்கி தங்கள் பட்டுக்களில் பார்டரில் இந்த ஆரி ஒர்க் மூலம் செதுக்கி விடுகிறார்கள்.

    இந்த தொழிலில் வட மாநிலத்தை சேர்ந்த தொழிலாளர்கள் பெருமளவில் ஈடுபடுகிறார்கள். நம்மூர் தையல்காரர்களும் இந்த ஆரி ஒர்க் வேலைப்பாடு செய்வதற்காக வடமாநில தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்தி வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. பிழைக்க தெரிந்தவன் எப்படி வேண்டுமானாலும் சம்பாதிப்பான் என்பதற்கு இதுவும் ஒரு உதாரணம். இது கலைஞர்களின் கற்பனை திறனை வெளிப்படுத்தி சம்பாதிக்கும் அற்புதமான கலை வேலைப்பாடு.

    Next Story
    ×