என் மலர்

  கிச்சன் கில்லாடிகள்

  கம்பு சாம்பார் சாதம்
  X
  கம்பு சாம்பார் சாதம்

  சர்க்கரை நோயாளிகளுக்கு சத்தான கம்பு சாம்பார் சாதம்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  அரிசியைக் காட்டிலும், கனிமம், கால்சியம், புரதம், இரும்பு, உயிர்ச்சத்து என அனைத்துச் சத்துக்களுமே அதிகம்கொண்ட தானியம் கம்பு. இன்று கம்பு சாம்பார் சாதம் செய்முறையை பார்க்கலாம்.
  தேவையான பொருட்கள் :

  கம்பு - ஒரு கப்
  துவரம்பருப்பு - அரை கப்
  மிளகாய்த்தூள் - அரை டீஸ்பூன்
  மஞ்சள்தூள் - அரை டீஸ்பூன்
  மல்லித்தூள் (தனியாத்தூள்) - அரை டீஸ்பூன்
  பெருங்காயத்தூள் - 2 சிட்டிகை
  புளி - சிறிய நெல்லிக்காய் அளவு
  உப்பு தேவையான அளவு

  தாளிக்க:

  கடுகு, சீரகம் - தலா ஒரு டீஸ்பூன்
  கறிவேப்பிலை - சிறிதளவு
  வறுத்த வேர்க்கடலை - 2 டீஸ்பூன்
  தேங்காய் எண்ணெய் தேவையான அளவு

  செய்முறை:

  புளியை ஊறவைத்துக் கரைத்து வடிகட்டவும்.

  குக்கரில் கம்பு, துவரம்பருப்பு சேர்த்து, மூழ்கும் அளவு தண்ணீர்விட்டு, மஞ்சள்தூள், பெருங்காயத்தூள் சேர்த்து மூடி 4 விசில்விட்டு இறக்கவும்.

  வாணலியில் தேங்காய் எண்ணெய்விட்டு கடுகு, சீரகம், கறிவேப்பிலை, வேர்க்கடலை தாளிக்கவும்.

  அதனுடன் புளிக்கரைசல், உப்பு, மிளகாய்த்தூள், மல்லித்தூள் சேர்த்து நன்கு கொதிக்கவிடவும்.

  பிறகு, வேகவைத்த சாதம் சேர்த்துக் கிளறி இறக்கிப் பரிமாறவும்.
  Next Story
  ×