search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    கேழ்வரகு பிரவுனி
    X
    கேழ்வரகு பிரவுனி

    குழந்தைகளுக்கு பிடித்தமான கேழ்வரகு பிரவுனி

    குழந்தைகளுக்கு கேக் என்றால் மிகவும் பிடிக்கும். இன்று கேழ்வரகு வைத்து சுவையான பிரவுனி கேக் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்

    கெட்டித்தயிர் - அரை கப்,
    பிரவுன் சுகர் - முக்கால் கப்,
    கேழ்வரகு மாவு - முக்கால் கப்,
    கோதுமை மாவு - அரை கப்,
    டார்க் சாக்லெட் - 140 கிராம்,
    கோக்கோ பவுடர் - 2 டேபிள் ஸ்பூன்,
    செக்கு தேங்காய் எண்ணெய் - கால் கப்,
    வெனிலா எசன்ஸ் - 1 டீஸ்பூன்,
    நட்ஸ்  - தேவைக்கேற்ப.

    கேழ்வரகு பிரவுனி

    செய்முறை

    கேழ்வரகு மாவு, கோதுமை மாவு மற்றும் கொக்கோ பவுடர் அனைத்தையும் சலித்து கொள்ளவும்.

    தேங்காய் எண்ணெய்,  சாக்லெட் இரண்டையும் டபுள் பாய்லரில் உருக்கவும்.

    மற்றொரு பாத்திரத்தில் பிரவுன் சுகர் மற்றும் கெட்டித்தயிர் இரண்டையும் கலக்கவும்.

    உருகிய சாக்லெட் கலவையை இத்துடன் சேர்க்கவும்.

    அடுத்து அதனுடன் வெனிலா எசன்ஸ் சேர்த்து கிளறவும்.

    சலித்த மாவை இதனுடன் சேர்த்து கட்டி இல்லாமல் கலந்து கேக் பாத்திரத்தில் ஊற்றி,  நட்ஸ் தூவி 180 டிகிரி பிரீ ஹீட்டட் ஓவனில் 30 நிமிடம் வைத்து எடுக்கவும்.

    சூப்பரான கேழ்வரகு பிரவுனி ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    Next Story
    ×