என் மலர்

  ஆரோக்கியம்

  பொட்டுக்கடலை லட்டு
  X
  பொட்டுக்கடலை லட்டு

  சத்தான ஸ்நாக்ஸ் பொட்டுக்கடலை லட்டு

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  பொட்டுக்கடலையில் இரும்புச்சத்து அதிகம் உள்ளது. இரத்தசோகை வராமல் தடுக்கிறது. குறைந்த அளவு கலோரிகளைக் கொண்டது. இந்த பொட்டுக்கடலையை வைத்து சத்தான லட்டு செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
  தேவையான பொருள்கள் :

  பொட்டுக்கடலை - 200 கிராம்
  வெல்லம் - 100 கிராம்
  முந்திரிப் பருப்பு - 10
  நெய் - 3 மேஜைக்கரண்டி
  மிதமான வெந்நீர் - 50 அல்லது 75 ml

  பொட்டுக்கடலை லட்டு

  செய்முறை :

  பொட்டுக்கடலை மற்றும் முந்திரிப் பருப்பை சேர்த்து மிக்ஸ்சியில் போட்டு பொடித்துக் கொள்ளவும்.

  வெல்லத்தை துருவி கொள்ளவும்.

  இரண்டையும் ஒரு பாத்திரத்தில் நன்றாக கலந்து வைக்கவும்.

  பின்னர் வெந்நீர் மற்றும் நெய்யை சிறிது சிறிதாக ஊற்றி கெட்டியாகும் வரை நன்றாக பிசைந்துக் கொள்ளவும்.

  எலுமிச்சை அளவு மாவை எடுத்து நன்றாக உருண்டையாக உருட்டி வைக்கவும். மீதமுள்ள மாவையும் இவ்வாறே செய்யவும்.

  சுவையான பொட்டுக் கடலை லட்டு ரெடி.

  இது குழந்தைகளுக்கு கொடுக்கக் கூடிய சத்தான லட்டு.

  இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
  Next Story
  ×