search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    ஓட்ஸ் லட்டு
    X
    ஓட்ஸ் லட்டு

    சுவையான ஓட்ஸ் லட்டு

    குழந்தைகளுக்கு லட்டு என்றால் மிகவும் பிடிக்கும். இன்று ஓட்ஸ் வைத்து எளிய முறையில் சுவையான லட்டு செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருள்கள் :

    ஓட்ஸ் - 200 கிராம்
    சர்க்கரை ( சீனி ) - 100 கிராம்
    முந்திரிப் பருப்பு - 10
    நெய் - 4 மேஜைக்கரண்டி
    மஞ்சள் புட்கலர் - 1/4 தேக்கரண்டி
    வெந்நீர் - தேவையான அளவு        

    ஓட்ஸ்         

    செய்முறை :

    அடுப்பில் கடாயை வைத்து சூடானதும் ஓட்ஸ், முந்திரிப்பருப்பு சேர்த்து லேசாக வறுத்துக் கொள்ளவும்.                                                                
    ஆறிய பின் மிக்ஸ்சியில் திரித்துக் கொள்ளவும். சர்க்கரையை தனியாக மிக்ஸ்சியில் பொடித்துக் கொள்ளவும். புட்கலரை ஒரு மேஜைக்கரண்டி தண்ணீர் ஊற்றி கரைத்துக் கொள்ளவும்.

    பின்னர் திரித்து வைத்துள்ள ஓட்ஸ் முந்திரிப்பருப்பு தூள், சர்க்கரைத் தூள், நெய், புட்கலரை கரைத்து வைத்துள்ள தண்ணீர் எல்லாவற்றையும் ஒன்றாக கலந்து வைக்கவும்.

    லட்டு பிடிக்கும் பதத்திற்கு வெந்நீரை சிறிது சிறிதாக ஊற்றி கிளறவும். பதம் சரியாக வந்தவுடன் சிறு சிறு உருண்டைகளாக பிடிக்கவும்.     
       
    சுவையான ஓட்ஸ் லட்டு ரெடி.     

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    Next Story
    ×