என் மலர்

  ஆரோக்கியம்

  பேரீச்சம் பழ கேக்
  X
  பேரீச்சம் பழ கேக்

  கிறிஸ்துமஸ் ஸ்பெஷல்: பேரீச்சம் பழ கேக்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  கிறிஸ்துமஸ் ஸ்பெஷலாக இன்று பேரீச்சம் பழத்தை வைத்து சுவையான கேக்கை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
  தேவையான பொருட்கள்

  விதை நீக்கிய பேரீச்சம்பழம் - 20
  மைதா - அரை கப்
  பால் - அரை கப்
  சர்க்கரை - தேவையான அளவு
  சமையல் சோடா - கால் டீஸ்பூன்
  எண்ணெய் - சிறிதளவு
  வால்நெட் முந்திரி பருப்பு - தேவையான அளவு
  வெண்ணெய் - சிறிதளவு

  பேரீச்சம் பழ கேக்

  செய்முறை

  பேரீச்சம் பழங்களை பாலில் அரை மணிநேரம் ஊறவைத்து கொள்ளவும்.

  பின்னர் அதனுடன் சர்க்கரை சேர்த்து விழுதாக அரைத்து கொள்ளவும்.

  இந்த கலவையுடன் எண்ணெய் சேர்த்து கலக்கவும்.

  அகன்ற பாத்திரத்தில் மைதாவையும் சமையல் சோடாவையும் கலந்து வைத்து கொள்ளவும்.

  பின்னர் பேரீச்சம் பழ கலவையுடன் மைதா மாவு கலவையை கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து கட்டி இல்லாமல் பிசைந்து கொள்ளவும்.

  இறுதியில் வால்நெட் முந்திரி பருப்புகளை தூவிக்கொள்ளவும். பின்னர் பேக்கிங் பேனில் வெண்ணெய் தடவி கலவையை ஊற்றி பரப்பி மைக்ரோ ஓவனில் வேக வைத்து எடுத்து பரிமாறவும்.

  சூப்பரான பேரீச்சம் பழ கேக் ரெடி.

  இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
  Next Story
  ×